மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 30 செப் 2021

ஐபிஎல்: ராஜஸ்தான் அணியை வீழ்த்தி பெங்களூரு வெற்றி!

ஐபிஎல்: ராஜஸ்தான் அணியை வீழ்த்தி பெங்களூரு வெற்றி!

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று (செப்டம்பர் 29) நடைபெற்ற 43ஆவது லீக் ஆட்டத்தில் விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. இதில் ராஜஸ்தான் அணியை ஏழு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி பெங்களூரு அபார வெற்றி பெற்றது.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் கோலி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதை அடுத்து ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக யாஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் எவின் லீவிஸ் களமிறங்கினர். இவரும் ராஜஸ்தான் அணிக்குச் சிறப்பான தொடக்கத்தை அளித்தனர்.

22 பந்துகளைச் சந்தித்த ஜெய்ஸ்வால் 31 ரன்கள் குவித்து வெளியேறினார். அதிரடியாக ஆடிய எவின் லீவிஸ் 37 பந்துகளில் 58 ரன்கள் குவித்து அவுட் ஆனார். பின்னர் களமிறங்கிய சஞ்சு சாம்சன் 19 ரன்கள் எடுத்த நிலையில் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அடுத்து களமிறங்கிய ராஜஸ்தான் வீரர்கள் அனைவரும் பெங்களூரு அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து அவுட் ஆகி வெளியேறினர்.

இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி ஒன்பது விக்கெட்டுகள் இழப்புக்கு 149 ரன்கள் எடுத்தது. சிறப்பாக பந்து வீசிய பெங்களூரு அணியின் ஹர்ஷல் பட்டேல் அதிகபட்சமாக மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதைத் தொடர்ந்து 150 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூரு அணியின் தொடக்க வீரர்களாக கேப்டன் கோலி மற்றும் தேவ்தத் படிக்கல் களமிறங்கினர். இரு வீரர்களும் சிறப்பான தொடக்கம் அளித்தனர். 17 பந்துகளைச் சந்தித்த படிக்கல் 22 ரன்களில் வெளியேறினார்.

அடுத்து வந்த ஸ்ரீகர் பாரத் கேப்டன் கோலியுடன் ஜோடி சேர்ந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார். கேப்டன் கோலி 25 ரன்களில் வெளியேறிய நிலையில் அடுத்துவந்த மேக்ஸ்வெல், பாரத் உடன் இணைந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். பொறுப்புடன் ஆடிய பாரத் 44 ரன்கள் எடுத்து வெளியேறினார். ஆனால், அதிரடியாக ஆடிய மேக்ஸ்வெல் 30 பந்துகளில் 50 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். இறுதியில் 17.1 ஓவரில் 3 விக்கெட்டுகளை இழந்த 153 ரன்களைக் குவித்தது.

இதனால், ராஜஸ்தான் அணியை ஏழு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அபார வெற்றிபெற்றது. ராஜஸ்தான் தரப்பில் அந்த அணியின் முஸ்தபிசூர் ரஹ்மான் அதிகபட்சமாக இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இன்றிரவு (செப்டம்பர் 30) சார்ஜாவில் அரங்கேறும் 44ஆவது லீக் ஆட்டத்தில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸும், கேன் வில்லியம்சன் தலைமையிலான ஹைதராபாத் சன் ரைசர்ஸும் மோதுகின்றன.

-ராஜ்

ரஜினி பாடல் காட்சிகள் அதிகம் விரும்பப்படவில்லையா?

4 நிமிட வாசிப்பு

ரஜினி பாடல் காட்சிகள் அதிகம் விரும்பப்படவில்லையா?

மானநஷ்ட வழக்கு தொடுத்த நடிகை சமந்தா

3 நிமிட வாசிப்பு

மானநஷ்ட வழக்கு தொடுத்த நடிகை சமந்தா

‘எனிமி’க்கு எனிமியான அண்ணாத்த

10 நிமிட வாசிப்பு

‘எனிமி’க்கு எனிமியான அண்ணாத்த

வியாழன் 30 செப் 2021