மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 29 செப் 2021

ருத்ர தாண்டவம் படத்தை தடை செய்ய முடியுமா?

ருத்ர தாண்டவம் படத்தை தடை செய்ய முடியுமா?

அக்டோபர் 1 அன்று ரிச்சர்ட், கௌதம் மேனன், ராதாரவி, தம்பி ராமைய்யா நடித்துள்ள ருத்ரதாண்டவம் திரைப்படம் வெளியாக உள்ளது. வண்ணாரப்பேட்டை, திரெளபதி படங்களை இயக்கிய மோகன் ஜீ இப்படத்தை இயக்கியுள்ளார்.

இப்படத்தின் முன்னோட்டம் வெளியானது முதல் படத்தை பற்றிய உள்ளடக்கம் பற்றி ஆதரவு மற்றும் எதிர்மறையான பதிவுகள் சமூக வலைத்தளங்களில் எப்போதும் இல்லாத வகையில் அதிகமாக காணப்படுகின்றன

கிறிஸ்தவ பாதிரியார் ஒருவர் என்னிடம் கூறிய சம்பவத்தை மையக்கருவாக கொண்டே இப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. போலித்தனமான மதவாதிகளை பற்றிய படம் என இயக்குநர் மோகன்ஜீ பத்திரிகையாளர் சந்திப்பில் கூறிய பின் இப்படம் இந்துக்களுக்கு ஆதரவானதா என்கிற விவாதம் தொடங்கியது. அதற்கேற்ப இதுவரை இந்து மதங்களின் பெருமை பேசுகின்றவர்களுக்கு ருத்ர தாண்டவம் படம் திரையிடப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் இன்று காலை ருத்ரதாண்டவம் படத்தை தடை செய்யக்கோரி சிறுபான்மையாக உள்ள கிறிஸ்தவ மதத் தலைமைப் பொறுப்பில் இருப்பர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருப்பதாக செய்தி கசிந்து வருகிறது

இது சம்பந்தமாக படத்தின் தயாரிப்பாளரும், இயக்குநருமான மோகன்ஜீயிடம் கேட்ட போது இதுவரை அப்படி ஒரு தகவலோ அல்லது நீதிமன்றத்தில் ஆஜராக கூறி சம்மனோ எனக்கு வரவில்லை என்றார்.

கோடம்பாக்க வட்டாரத்தில் விசாரித்தபோது, ”கடந்த இரண்டு நட்களாக படத்தை தடை செய்ய வேண்டும் என்று சிறுபான்மை மத தலைவர்கள் வழக்கு தொடர முயற்ச்சி செய்து வருவது உண்மைதான். தணிக்கை சான்றிதழ் பெற்ற பின்பு அப்படத்தை தடை செய்ய முடியாது. அப்படியே ஒரு வேளை வழக்கு நீதிமன்ற விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டால், அது படத்திற்கு மிகப்பெரும் வசூலை தயாரிப்பாளருக்கு கிடைக்க வழிவகுக்கும். கொரோனாவில் முடங்கி இருக்கும் மக்கள் தியேட்டரை நோக்கி அனைவரும் வருவதற்கு வாய்ப்பாக இருக்கும்” என்கின்றனர்.

-இராமானுஜம்

ஜெய்பீம்: ஆஸ்காரைத் தொடர்ந்து அடுத்த அங்கீகாரம்!

3 நிமிட வாசிப்பு

ஜெய்பீம்: ஆஸ்காரைத் தொடர்ந்து அடுத்த அங்கீகாரம்!

மன்மத லீலை சர்ச்சை: வெங்கட் பிரபு விளக்கம்!

4 நிமிட வாசிப்பு

மன்மத லீலை சர்ச்சை: வெங்கட் பிரபு  விளக்கம்!

பொங்காத பொங்கல் திரைப்படங்கள்!

4 நிமிட வாசிப்பு

பொங்காத பொங்கல் திரைப்படங்கள்!

புதன் 29 செப் 2021