மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 29 செப் 2021

விஜய் சிறந்த நடிகர் இல்லை: சித்திக்

விஜய் சிறந்த நடிகர் இல்லை: சித்திக்

மலையாளத் திரையுலகத்தின் மூத்த நடிகர்களில் ஒருவரான சித்திக் தமிழ் சினிமாவில் ‘இளைய தளபதி’ என்றழைக்கப்படும் நடிகர் விஜய்யை “சிறந்த நடிகர் அல்ல” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

மலையாள சேனல் ஒன்றுக்கு சித்திக் அளித்த பேட்டியில் இப்படி சொல்லியிருக்கிறார்.

அந்தப் பேட்டியில் சித்திக் இதுபற்றிப் பேசும்போது, “மலையாளத் திரையுலகம் நிறையவே அதிர்ஷ்டம் செய்துள்ளது. அதனால்தான் மம்மூட்டி, மோகன்லால் என்ற இரண்டு மறுக்க முடியாத சூப்பர் ஸ்டார் நடிகர்களைக் கொண்டுள்ளது.

மற்றைய திரையுலகத்தில்கூட இப்படியில்லை. தமிழ்த் திரைப்படத் துறையில் வித்தியாசமான நிலைமைதான் உள்ளது. தமிழகத்து மக்கள் விஜய்யை ‘சூப்பர் ஸ்டார்’ என்று போற்றுகிறார்கள். ஆனால், அவர் சிறந்த நடிகர் அல்ல. அவருடைய ‘சூப்பர் ஸ்டார்’ பட்டமே அவரை உயரத்தில் வைத்திருக்கிறது.

அதேநேரம் தமிழ்ச் சினிமாவில் கமல்ஹாசனை சிறந்த நடிகர் மற்றும், சூப்பர் ஸ்டார் நடிகர் என்றும் சொல்லலாம்…” என்று சொல்லியிருக்கிறார் நடிகர் சித்திக்.

இது பற்றி மற்றொரு மலையாள நடிகரான ஹரீஸ் பெராடி பேசும்போது, “விஜய் சிறந்த நடிகர் மட்டுமல்ல; தற்போதைய தலைமுறையினருக்கு சூப்பர் ஸ்டார் நடிகரும் அவர்தான். அவர் ஒரு சிறந்த மனிதரும்கூட” என்று சொல்லியிருக்கிறார்.

-இராமானுஜம்

பிக்பாஸ் அக்‌ஷரா ரெட்டியின் மறுமுகம்!

6 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் அக்‌ஷரா ரெட்டியின் மறுமுகம்!

நடிகர்களை பின்னுக்கு தள்ளிய ராஷ்மிகா மந்தனா

3 நிமிட வாசிப்பு

நடிகர்களை பின்னுக்கு தள்ளிய ராஷ்மிகா மந்தனா

வாகா எல்லையில் நடிகர் அஜித்

2 நிமிட வாசிப்பு

வாகா எல்லையில் நடிகர் அஜித்

புதன் 29 செப் 2021