மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 29 செப் 2021

பான் இந்தியா படங்களின் ரிலீஸ் தேதி!

பான் இந்தியா படங்களின் ரிலீஸ் தேதி!

பான் இந்திய படமாக உருவாகி வரும் இரண்டு முக்கியமான இந்தியத் திரைப்படங்களின் ரிலீஸ் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

‘பாகுபலி’ படம் மூலம் பிரபலமான பிரபாஸ் அடுத்ததாக ‘ஆதி புருஷ்’ என்ற புதிய படத்தில் நடித்து வருகிறார். ராமாயணத்தின் ஒரு பகுதியை மையமாக வைத்து இந்தப் படம் தயாராகிறது.

தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய ஐந்து மொழிகளில் தயாராகும் இந்தப் படம் 3-டி தொழில் நுட்பத்தில் உருவாகிறது.

இந்தப் படத்தில் ராமர் கதாபாத்திரத்தில் பிரபாஸ் நடிக்கிறார். சீதையாக கீர்த்தி சனோனும், ராவணனாக பிரபல பாலிவுட் நடிகர் சையிப் அலிகானும் நடிக்கின்றனர்.

கார்த்திக் பழனி ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்துக்கு சச்சேத் பரம்பரா இசையமைக்கிறார். இயக்குநர் ஓம் ராவத் இந்தப் படத்தை இயக்குகிறார்.

பிரமாண்டமான பட்ஜெட்டில் தயாராகும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு, தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், இந்த ‘ஆதி புருஷ்’ படத்தின் அதிகாரபூர்வ ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்தப் படம் 2022 ஆகஸ்ட் 11ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்னொரு பான் இந்திய திரைப்படமான ராக்கெட்ரி படத்தின் ரிலீஸ் தேதியும் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படம் உருவாகியுள்ளது.

இந்தப் படத்தில் நடிகர் மாதவன் விஞ்ஞானி நம்பி நாராயணனாக நடித்துள்ளதோடு, படத்தையும் இயக்கி உள்ளார். இந்தப் படம் மூலமாக அவர் இயக்குநராக அறிமுகமாகிறார். இந்தப் படத்தில் மாதவனுக்கு ஜோடியாக சிம்ரன் நடித்துள்ளார்.

சின்னத்திரை நிகழ்ச்சிகளின் மூலம் பிரபலமான ஜெகன் சயின்டிஸ்ட் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் நடிகர்கள் சூர்யா, ஷாருக் கான் ஆகியோர் கவுரவ வேடத்தில் நடித்துள்ளனர்.

இந்தப் படத்துக்கு சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார். பிரமாண்ட பொருட்செலவில் இந்தப் படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம், ஆங்கிலம் ஆகிய ஆறு மொழிகளில் தயாராகியுள்ளது.

இந்த ‘ராக்கெட்ரி’ படத்தின் அதிகாரபூர்வ ரிலீஸ் தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்தப் படம் 2022 ஏப்ரல் மாதம் 1ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவித்துள்ளனர்.

-இராமானுஜம்

‘ஜென்டில்மேன் 2’ இசையமைப்பாளர் அறிவிப்பு!

3 நிமிட வாசிப்பு

‘ஜென்டில்மேன் 2’ இசையமைப்பாளர் அறிவிப்பு!

வசூலில் வாகை சூடிய ‘வீரமே வாகை சூடும்’!

3 நிமிட வாசிப்பு

வசூலில் வாகை சூடிய ‘வீரமே வாகை சூடும்’!

பரத்தை அடித்தேனா?- சர்ச்சைகளுக்கு வெங்கடேஷ்பட் விளக்கம்!

3 நிமிட வாசிப்பு

பரத்தை அடித்தேனா?- சர்ச்சைகளுக்கு வெங்கடேஷ்பட் விளக்கம்!

புதன் 29 செப் 2021