மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 29 செப் 2021

30 ஆண்டுகளுக்குப் பின் நடிக்க வரும் அமலா

30 ஆண்டுகளுக்குப் பின் நடிக்க வரும் அமலா

தமிழ் சினிமாவில் 1980-களில் முன்னணி கதாநாயகியாக வலம்வந்தவர் அமலா. இவர் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த், மோகன், பிரபு, சத்யராஜ், மம்முட்டி உள்ளிட்ட பெரிய நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார். ‘மைதிலி என்னை காதலி’, ‘மெல்ல திறந்தது கதவு’, ‘வேலைக்காரன்’, ‘வேதம் புதிது’, ‘அக்னி நட்சத்திரம்’, ‘கொடி பறக்குது’, ‘மாப்பிள்ளை’, ‘வெற்றி விழா’, ‘மவுனம் சம்மதம்’ உள்ளிட்ட பல வெற்றி படங்களில் நடித்து இருக்கிறார். தெலுங்கிலும் அதிக படங்களில் நடித்தார்.

1991இல் ‘கற்பூர முல்லை’ தமிழ்ப் படத்தில்தான் அமலா கடைசியாக நடித்து இருந்தார். 30 வருடங்களுக்கு பிறகு தற்போது டிரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கும் ‘கணம்’ என்ற தமிழ்ப் படத்தில் அமலா நடிக்கிறார்.

இந்தப் படத்தில் ஷர்வானந்த் கதாநாயகனாக நடிக்கிறார். இவரும் கடைசியாக 2015இல் வெளியான ஜே.கே.எனும் நண்பனின் வாழ்க்கை படத்தில் நடித்து இருந்தார். தொடர்ந்து தெலுங்கு படங்களில் நடித்தார். ஆறு வருடங்களுக்கு பிறகு மீண்டும் இந்தக் கணம்’ படம் மூலம் தமிழுக்கு வருகிறார்.

இந்தப் படத்தில் ஷர்வானந்த் ஜோடியாக ரீது வர்மா நடிக்கிறார். மேலும் நாசர், சதீஷ், ரமேஷ் திலக் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். இந்தப் படத்தை அறிமுக இயக்குநரான ஸ்ரீகார்த்திக் இயக்குகிறார். எஸ்.ஆர்.பிரகாஷ்பாபு, எஸ்.ஆர்.பிரபு ஆகியோர் தயாரிக்கின்றனர்.

- அம்பலவாணன்

ரெட்டை ஜடையில் அமலா பால்: வைரலாகும் புகைப்படம்!

3 நிமிட வாசிப்பு

ரெட்டை ஜடையில் அமலா பால்: வைரலாகும் புகைப்படம்!

ஆஸ்கார் தகுதிப்பட்டியலில் ஜெய்பீம்!

3 நிமிட வாசிப்பு

ஆஸ்கார் தகுதிப்பட்டியலில் ஜெய்பீம்!

சுசிகணேசன் வழக்கு: சின்மயி - லீனா மணிமேகலைக்கு எதிராக தீர்ப்பு! ...

4 நிமிட வாசிப்பு

சுசிகணேசன் வழக்கு: சின்மயி - லீனா மணிமேகலைக்கு எதிராக தீர்ப்பு!

புதன் 29 செப் 2021