மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 28 செப் 2021

சின்னதம்பி 2 வருமா?: குஷ்பு பதில்!

சின்னதம்பி 2 வருமா?: குஷ்பு பதில்!

தமிழ் சினிமா மூத்த நடிகர், நடிகைகளுக்கு இது எடை குறைப்பு சீசன் போல... சமீபத்தில் குஷ்பு தனது உடல் எடையை வெகுவாக குறைத்து, அவரது படங்களை பகிர்ந்தார். அவை வைரலாகின. அடுத்து பிரபுவும் உடல் எடையைக் குறைத்துள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் பிரபு. இளம் வயதில் அவருக்கே உரிய உடல்வாகில் பார்ப்பதற்கு அழகாகக் காணப்பட்டார். பின்னர் வருடங்கள் செல்ல உடல் எடை அதிகரித்தார்.

பின்னர் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடிக்க ஆரம்பித்தார். இந்நிலையில் பிரபுவின் சமீபத்திய புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியானது. அதில் பிரபு மெலிந்து காணப்பட்டார். பிரபு 20 கிலோ வரை உடல் எடையைக் குறைத்துள்ளாராம். அதற்குக் காரணம் மணிரத்னம் தான்.

மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் படத்தில் பிரபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். படத்தில் அநிருத்தப் பிரம்மராயர் கதாபாத்திரத்தில் பிரபு நடித்திருப்பதாக கூறப்படுகிறது. நீண்ட காலமாகத் தனது எடையைக் குறைக்க நினைத்த அவர் பொன்னியின் செல்வன் படத்தில் நடிப்பதற்காகக் குறைத்துள்ளார்.

இதற்காக உடற்பயிற்சி செய்துள்ள அவர் சில இயற்கை உணவு முறைகளையும் பின்பற்றியதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில் ரசிகர் ஒருவர் எடை குறைந்த நிலையில் இருக்கும் பிரபு மற்றும் குஷ்புவின் புகைப்படத்தைப் பகிர்ந்து, இயக்குநர் வாசு சார், சந்திரமுகி இரண்டாம் பாகத்துக்கு முன், சின்னதம்பி இரண்டாம் பாகம் எடுக்கலாம் என்று குறிப்பிட்டிருந்தார்.

அதற்குப் பதிலளித்த நடிகை குஷ்பு சிரிப்பது போன்ற ஸ்மைலியை பதிவிட்டார். பி.வாசு இயக்கத்தில் பிரபு - குஷ்பு இணைந்து நடித்த சின்னதம்பி திரைப்படம் கடந்த 1991 ஆம் வருடம் வெளியாகி மிகப் பெரிய வெற்றி அடைந்தது தொடர்ந்து கன்னடம், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளிலும் மறு உருவாக்கம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

-இராமானுஜம்

பிக்பாஸ் அக்‌ஷரா ரெட்டியின் மறுமுகம்!

6 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் அக்‌ஷரா ரெட்டியின் மறுமுகம்!

நடிகர்களை பின்னுக்கு தள்ளிய ராஷ்மிகா மந்தனா

3 நிமிட வாசிப்பு

நடிகர்களை பின்னுக்கு தள்ளிய ராஷ்மிகா மந்தனா

வாகா எல்லையில் நடிகர் அஜித்

2 நிமிட வாசிப்பு

வாகா எல்லையில் நடிகர் அஜித்

செவ்வாய் 28 செப் 2021