மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 28 செப் 2021

ரெண்டாவது டோஸ்: அப்டேட் குமாரு

ரெண்டாவது டோஸ்: அப்டேட் குமாரு

டாஸ்மாக் வாசல்ல நின்னு ரெண்டாவது டோஸ் போட்டுட்டியானு ஒரு குடி பிரியர் இன்னொரு குடி பிரியரைப் பாத்து பாசமா கேட்டாரு. பக்கத்துல நின்ன நான் பதறிப் போய், 'அண்ணே... ரெண்டாவது டோஸ் போட்டுட்டு குடிக்காதீங்க. ரெண்டு மூணு நாள் கேப் விடுங்க" னு சொல்ல... ரெண்டு பேரும் என்ன பாத்து பயங்கரமா சிரிச்சாங்க. அப்புறமா..."தம்பி... மொத டோஸ் னா மொத கட்டிங். ரெண்டாவது டோஸ்னா ரெண்டாவது கட்டிங்"அப்படின்னு விளக்கம் வேற சொன்னாங்க. அப்டேட் குமார விட அப்டேட்டா இருக்காங்களேனு ஆனந்தக் கண்ணீர் வடிச்சுட்டேன்.

மயக்குநன்

அதிமுக கொண்டுவந்த திட்டங்களைத்தான் திமுக அரசு தொடங்கி வைக்கிறது!- எடப்பாடி பழனிசாமி.

அப்ப... 'அம்மா ஆட்சி' இன்னும் தொடர்ந்துக்கிட்டு இருக்குன்னு நெனச்சு சந்தோஷப்படுங்க தலைவரே..!

balebalu

இரண்டு விஜய் மக்கள் இயக்கம் : குழம்பிய ரசிகர்கள் - செய்தி

அரசியலிலும் டபுள் ஆக்ட் ?

ℳ𝐬𝐝இதயவன்

பள்ளிகள் வழியே குழந்தைகளுக்கு கொரோனா பரவும் வாய்ப்பு குறைவு,'' ~ உலக சுகாதார அமைப்பைச் சேர்ந்த விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன்

ஆமா ஆமா பாடம் நடத்துவாங்க னு பயப்படும் ல்ல ?!

செங்காந்தள்

உண்மையாலுமே

கருமையான தலைமுடி உள்ளவர்களையும் சந்தேகப்பட வைத்து விடுகிறது ஹேர்டை...!!!

amudu

சரியா கேட்கல, சரியா தெரியல" என்பதே, பாடம் நடத்திய நேரத்தை விட, அதிக நேரம் ஆன்லைன் கிளாஸ்களில் சொல்லப்பட்டதாக இருக்கும்.

Tamilithayan

'சாப்டீங்களா அக்கா'னு கேட்ட சசிகலாவுக்கே ₹92000 கோடி சொத்துனா,

சாப்பிட்ட, அக்காவுக்கு எத்தனை கோடி இருக்கும்..??

நாகராஜசோழன்.MA.MLA

தடை செய்யப்பட்ட பட்டாசு வகைகளை எதற்காக தயாரிக்கிறீர்கள் ?- நீதிபதிகள் கேள்வி

ஒரு நாளைக்கு வெடிக்கும் பட்டாசு பத்தி இத்தன கேள்வி கேகரீங்களே! டாஸ்மாக் ல மட்டும் என்ன சுக்கு நீரும், பருத்தி பாலுமா விக்கராங்கா! அதையும் கொஞ்சம் கேள்வி கேளுங்களேன்...!

balebalu

புரட்டாசி மாதம் "வயிறு அடங்கு" சிலருக்கு !

தளர்வுகள் பலருக்கு

தர்மஅடி தர்மலிங்கம்

இன்னொரு தலைவரை தவறாக பேசுவது எங்கள் டி.என்.ஏ-வில் கிடையாது -அண்ணாமலை.

ஒருவேளை.. அது உங்க கட்சியில இருக்குமோ..?!

கோழியின் கிறுக்கல்!!

அண்ணனும் தங்கையும்,

வீட்டில் இருக்கும் போது தளபதியின் முதல் பாதி சூர்யா தேவா மாதிரி சண்டை போட்டுக்கிறது,

வெளியே போனால் பின் பாதி சூரியா தேவா போல் நடிப்பது வாடிக்கை!!

மயக்குநன்

தேவகோட்டை காங்கிரஸ் கூட்டத்தில் கைகலப்பு!- கார்த்தி சிதம்பரம் எம்பி முன்னிலையில் நாற்காலி வீச்சு.

காங்கிரஸ்கிட்ட நாற்காலியைக் கொடுக்க மக்கள் ஏன் யோசிக்கிறாங்கன்னு இப்ப புரியுது..!

கோழியின் கிறுக்கல்!

குழந்தைகள் நாம் பார்க்கும் பொழுது கீழே விழுந்து விட்டால், சிவாஜிக்கு சித்தப்பா போல ஒரு ஆக்டிங்கை போடுவாங்க,

அதே பார்க்காதப்ப விழுந்தா, தோனிக்கு ஒண்ணு விட்ட தம்பி மாதிரி கூலா தொடைச்சிட்டு போய்டுவாங்க!!

-லாக் ஆஃப்

ரஜினி பாடல் காட்சிகள் அதிகம் விரும்பப்படவில்லையா?

4 நிமிட வாசிப்பு

ரஜினி பாடல் காட்சிகள் அதிகம் விரும்பப்படவில்லையா?

மானநஷ்ட வழக்கு தொடுத்த நடிகை சமந்தா

3 நிமிட வாசிப்பு

மானநஷ்ட வழக்கு தொடுத்த நடிகை சமந்தா

‘எனிமி’க்கு எனிமியான அண்ணாத்த

10 நிமிட வாசிப்பு

‘எனிமி’க்கு எனிமியான அண்ணாத்த

செவ்வாய் 28 செப் 2021