மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 28 செப் 2021

நீட் -தற்கொலை தீர்வல்ல: சாய் பல்லவி

நீட் -தற்கொலை தீர்வல்ல: சாய் பல்லவி

நாக சைதன்யா, சாய்பல்லவி நடித்த லவ் ஸ்டோரி படம் உலகம் முழுவதும் வரவேற்பையும், வசூலையும் குவித்து வருகிறது. சாய்பல்லவி தெலுங்கு ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்து வருகிறார். அவர் அடிப்படையில் ஒரு டாக்டர் என்பதால் நீட் தேர்வு குறித்தும் கேள்வி கேட்கப்பட்டுள்ளது, அதற்கு அவர் அளித்த பதில் வருமாறு....

மருத்துவம் படித்தவள் என்பதால் என்னால் நீட் தேர்வு எழுதுகிறவர்களின் நிலையை புரிந்துகொள்ள முடிகிறது. மருத்துவ படிப்பு கடல் மாதிரி பெரியது. எங்கிருந்து என்ன கேள்வி கேட்பார்கள் என்றே தெரியாது. அதனால் மனம் அழுத்தமாக இருக்கக்கூடும்.

என் ஒன்றுவிட்ட சகோதரர் ஒருவர் மதிப்பெண் குறைந்துவிட்டது என்று தற்கொலை செய்து கொண்டார். இத்தனைக்கும் அவர் குறைவான மதிப்பெண்கள் எடுக்கவில்லை. ஆனால் அவர் எதிர்பார்த்த மதிப்பெண்கள் கிடைக்கவில்லை என்பதால் தற்கொலை முடிவை எடுத்து விட்டார்.

தயவு செய்து தற்கொலை செய்து கொள்ளாதீர்கள் என்று நான் சொல்வது எளிது. நன்றாக எழுதுவோம் என்று நினைத்து, ஆனால் நன்றாக எழுதவில்லை என்றால் நம்பிக்கையை இழப்பார்கள். ஆனால் இது முடிவு இல்லை. தோற்பது தெரிந்தால் மற்றவர்களிடம் மனம் விட்டு பேச வேண்டும். மாற்று வழி பற்றி யோசிக்க வேண்டும். எந்த விதத்திலும் தற்கொலை தீர்வாகாது.

18 வயது மாணவ, மாணவியர் தற்கொலை செய்து கொண்டது மன வேதனையாக இருக்கிறது. தோற்றவர்கள் வலியும், குழப்பமும் எனக்கு புரிகிறது. அவர்களுக்கு யாராவது உறுதுணையாக இருக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

-அம்பலவாணன்

ஜெய்பீம்: ஆஸ்காரைத் தொடர்ந்து அடுத்த அங்கீகாரம்!

3 நிமிட வாசிப்பு

ஜெய்பீம்: ஆஸ்காரைத் தொடர்ந்து அடுத்த அங்கீகாரம்!

மன்மத லீலை சர்ச்சை: வெங்கட் பிரபு விளக்கம்!

4 நிமிட வாசிப்பு

மன்மத லீலை சர்ச்சை: வெங்கட் பிரபு  விளக்கம்!

பொங்காத பொங்கல் திரைப்படங்கள்!

4 நிமிட வாசிப்பு

பொங்காத பொங்கல் திரைப்படங்கள்!

செவ்வாய் 28 செப் 2021