மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 28 செப் 2021

விஜய் தேவரகொண்டா படத்தில் மைக் டைசன்

விஜய் தேவரகொண்டா படத்தில் மைக் டைசன்

விஜய் தேவரகொண்டா, பூரி ஜெகன்நாத், கரண் ஜோகர், சார்மி கவுர் தயாரிப்பில் உருவாகி வரும் படம் லிகர். விஜய் தேவரகொண்டா நாயகனாக நடிக்க, ரம்யா கிருஷ்ணன், ரோனித் ராய், விஷ்ணு ரெட்டி, ஆலி மகரந்த் தேஷ் பாண்டே, கெட்டப் ஶ்ரீனு உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். பூரி ஜெகன்நாத் இயக்குகிறார்.

இந்தப் படத்தில் உலக மக்களால் வசீகரிக்கப்பட்ட, குத்துச்சண்டை வீரர் மைக் டைசன் நடிக்கிறார். இந்திய படம் ஒன்றில் இவர் நடிப்பது இதுவே முதல்முறையாகும். படத்தில் இவர் அயர்ன் மைக் என்ற வேடத்தில் நடிக்கிறார்.

தீவிரமான ஆக்சன் கதையாக உருவாகும் இப்படத்தில் இவரது வரவு இன்னும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியதுடன் வர்த்தக மதிப்பையும் உருவாக்கியுள்ளது . தெலுங்கு, தமிழ், இந்தி என மும்மொழி படமாக இந்த படம் உருவாகிறது.

இதுகுறித்து விஜய் தேவரகொண்டா ட்விட்டரில் குறிப்பிடும் போது, “நாங்கள் கொடுத்த வாக்கை, நிறைவேற்ற துவங்கியுள்ளோம். இந்திய திரையுலகில் முதன்முறையாக, லிகர் படத்தில் இணையும் முக்கிய பிரபலம்.

இந்த பிரபஞ்சத்தின் சக்திமிக்க மனிதர், குத்து சண்டையின் கடவுள், லெஜண்ட், பீஸ்ட், காலத்தால் அழிக்க முடியாத புகழ் கொண்ட நாயகன், மைக் டைசனை இந்திய திரையுலகிற்கு வரவேற்கிறோம். இன்னும் சில நாட்களுக்கு , உங்கள் ஆர்வத்தை கட்டுபடுத்தி வைத்துகொள்ளுங்கள். இந்தபடம் தியேட்டர்களில் வெளியாக தயாராகி கொண்டிருக்கிறது.கொண்டாட தயாராகுங்கள்'' என பதிவிட்டுள்ளார்

-இராமானுஜம்

ரஜினி பாடல் காட்சிகள் அதிகம் விரும்பப்படவில்லையா?

4 நிமிட வாசிப்பு

ரஜினி பாடல் காட்சிகள் அதிகம் விரும்பப்படவில்லையா?

மானநஷ்ட வழக்கு தொடுத்த நடிகை சமந்தா

3 நிமிட வாசிப்பு

மானநஷ்ட வழக்கு தொடுத்த நடிகை சமந்தா

‘எனிமி’க்கு எனிமியான அண்ணாத்த

10 நிமிட வாசிப்பு

‘எனிமி’க்கு எனிமியான அண்ணாத்த

செவ்வாய் 28 செப் 2021