மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 28 செப் 2021

மகேஷ் பாபுக்கு பதிலளித்த ஏ.ஆர். ரஹ்மான்

மகேஷ் பாபுக்கு பதிலளித்த ஏ.ஆர். ரஹ்மான்

தெலுங்குத் திரையுலகத்தில் கொரோனா இரண்டாவது அலைக்குப் பிறகு 'லவ் ஸ்டோரி' படத்திற்குக் கிடைத்த வரவேற்பு தான் இந்தியத் திரையுலகில் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. முதல் நாளே 11 கோடி ரூபாய் வசூல் செய்திருக்கிறது இந்தப்படம்.

சேகர் கம்முலா இயக்கத்தில் நடிகை சமந்தாவின் கணவர் நாக சைதன்யா, பிரேமம் புகழ் சாய் பல்லவி மற்றும் பலர் நடித்துள்ள அந்தப் படத்திற்கு பவன் இசையமைத்துள்ளார். இவர் ஏ.ஆர்.ரஹ்மான் நடத்தி வரும் இசைக் கல்லூரியில் படித்தவர்.

'லவ் ஸ்டோரி' படம் குறித்து மகேஷ் பாபு ட்வீட் செய்தது, அந்தப் படத்திற்கு கூடுதல் வரவேற்பை ஏற்படுத்தி வசூலை அதிகரிக்க செய்துள்ளது அவரது டிவீட்டில் இசையமைப்பாளர் பவன் பற்றி, “பவனிடமிருந்து இன்னும் பலவற்றைக் கேட்க உள்ளோம். என்ன ஒரு இசையமைப்பு, உணர்ச்சிமிக்க ஒன்று. அவர் ஏ.ஆர்.ரஹ்மானின் மாணவர் எனக் கேள்விப்பட்டேன். ரஹ்மான் சார், அவரைப் பற்றி நீங்கள் பெருமைப்படலாம்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.

மகேஷ் பாபுவின் ட்வீட்டுக்கு ஏ.ஆர். ரஹ்மான், “ஆமாம், அவர் மிகத் திறமை வாய்ந்தவர், பணிவானவர். எங்களது இசைக் கல்லூரியில் உள்ள அனைவரும் அவருடைய வெற்றிக்காக உண்மையில் பெருமைப்படுகிறோம், எல்லாப் புகழும் இறைவனுக்கே,” என பதிலளித்துள்ளார்.

-அம்பலவாணன்

அப்பாவுக்கு தமிழ் எழுத தெரியாது: சவுந்தர்யா

2 நிமிட வாசிப்பு

அப்பாவுக்கு தமிழ் எழுத தெரியாது: சவுந்தர்யா

10 ஆண்டுகளுக்குப் பின் நடிக்கும் வாணி விஸ்வநாத்

2 நிமிட வாசிப்பு

10 ஆண்டுகளுக்குப் பின் நடிக்கும் வாணி விஸ்வநாத்

சிம்பு குடும்பத்தினர் மீது போலீஸில் புகார்!

3 நிமிட வாசிப்பு

சிம்பு குடும்பத்தினர் மீது போலீஸில் புகார்!

செவ்வாய் 28 செப் 2021