மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 28 செப் 2021

ஐபிஎல்: ராஜஸ்தான் அணியை வீழ்த்திய ஹைதராபாத்!

ஐபிஎல்: ராஜஸ்தான் அணியை வீழ்த்திய ஹைதராபாத்!

ஐபிஎல் கிரிக்கெட்டின் நேற்றைய (செப்டம்பர் 27) லீக் ஆட்டத்தில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இதில் ராஜஸ்தான் அணியை ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ஹைதராபாத் அணி அபார வெற்றி பெற்றுள்ளது.

ஐபிஎல் கிரிக்கெட்டின் 40ஆவது லீக் ஆட்டத்தில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். இதனையடுத்து ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக எவின் லிவிஸ் மற்றும் யாஷஸ்வி ஜெய்ஸ்வால் களமிறங்கினர்.

எவின் லிவிஸ் 6 ரன்களில் அவுட் ஆன நிலையில், பின்னர் வந்த கேப்டன் சஞ்சு சாம்சன், ஜெய்ஸ்வால் உடன் இணைந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அதிரடியாக ஆடிய ஜெய்ஸ்வால் 23 பந்துகளில் 5 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 36 ரன்கள் எடுத்து சந்தீப் சர்மா பந்தில் அவுட் ஆனார்.

கேப்டன் சஞ்சு சாம்சன் சிறப்பாக விளையாடி 41 பந்துகளில் அரை சதம் கடந்தார். தொடர்ந்து சிறப்பாக ஆடிய சஞ்சு சாம்சன் ஹைதராபாத் அணி பந்து வீச்சைச் சிதறடித்தார். அவர் 57 பந்துகளில் 7 பவுண்டரிகள் 3 சிக்சர்களுடன் 82 ரன்கள் எடுத்து சித்தார்த் கவுல் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

ஹைதராபாத் அணி தரப்பில் சித்தார்த் கவுல் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். சந்தீப் சர்மா, புவனேஷ்வர் குமார், ரஷித் கான் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.

20 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 164 ரன்கள் எடுத்தது.

இதைத் தொடர்ந்து 165 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் தொடக்க வீரர்களாக ஜேசன் ராய் மற்றும் சஹா களமிறங்கினர்.

11 பந்துகளைச் சந்தித்த சஹா 18 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார். அதன் பின்னர் கேப்டன் கேன் வில்லியம்சன்னுடன் ஜோடி சேர்ந்த ஜேசன் ராய் ராஜஸ்தான் பந்து வீச்சை சிதறடித்தார். அதிரடியாக ஆடிய ஜேசன் ராய் 42 பந்துகளில் 8 பவுண்டர்கள், 1 சிக்சர் உள்பட 60 ரன்கள் குவித்து அவுட் ஆனார். அடுத்துவந்த ரியான் பராக் ரன் எதுவும் எடுக்காமல் வெளியேறினார். ஆனால், மறுமுறையில் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் வில்லியம்சன் அரை சதம் கடந்தார்.

இறுதியில் 18.3 ஓவரில் 3 விக்கெட்டுகளை இழந்த சன்ரைசர்ஸ் 167 ரன்களை எடுத்தது. இதனால், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அபார வெற்றி பெற்றது.

வில்லியம்சன் 51 ரன்களிலும், அபிஷேக் சர்மா 21 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். ராஜஸ்தான் தரப்பில் அந்த அணியின் முஸ்தபிசுர் ரஹ்மான், மஹிபால் லூமோர், சேதன் சகரியா தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர்.

இன்று (செப்டம்பர் 28) இரண்டு ஆட்டங்கள் நடைபெறுகின்றன. 3.30 மணிக்கு நடக்கும் 41ஆவது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா அணியும் டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் மோதுகின்றன. 7.30 மணிக்கு நடக்கும் 42ஆவது லீக் ஆட்டத்தில் மும்பை அணியும் பஞ்சாப் அணியும் மோதுகின்றன.

-ராஜ்

‘ஜென்டில்மேன் 2’ இசையமைப்பாளர் அறிவிப்பு!

3 நிமிட வாசிப்பு

‘ஜென்டில்மேன் 2’ இசையமைப்பாளர் அறிவிப்பு!

வசூலில் வாகை சூடிய ‘வீரமே வாகை சூடும்’!

3 நிமிட வாசிப்பு

வசூலில் வாகை சூடிய ‘வீரமே வாகை சூடும்’!

பரத்தை அடித்தேனா?- சர்ச்சைகளுக்கு வெங்கடேஷ்பட் விளக்கம்!

3 நிமிட வாசிப்பு

பரத்தை அடித்தேனா?- சர்ச்சைகளுக்கு வெங்கடேஷ்பட் விளக்கம்!

செவ்வாய் 28 செப் 2021