மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 27 செப் 2021

‘த்ரில்’ வெற்றியுடன் பிளேஆப் சுற்றுக்கு முன்னேறிய சென்னை அணி!

‘த்ரில்’ வெற்றியுடன் பிளேஆப் சுற்றுக்கு முன்னேறிய சென்னை அணி!

சென்னை சூப்பர் கிங்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையில் அபுதாபியில் நடைபெற்ற ஐபிஎல் 2021 கிரிக்கெட்டின் 38ஆவது லீக்கின் கடைசி பந்து வரை திக் திக் திக் ஆட்டத்துடன் கொல்கத்தாவை வீழ்த்தி பிளேஆப் சுற்றுக்கு முன்னேறியது சென்னை அணி.

சென்னை சூப்பர் கிங்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் 2021 கிரிக்கெட்டின் 38ஆவது லீக் ஆட்டம் அபுதாபியில் நேற்று மாலை (செப்டம்பர் 26) நடைபெற்றது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் கேப்டன் மோர்கன் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் வெய்ன் பிராவோ இடம் பெறவில்லை. அதற்குப் பதிலாக சாம் கர்ரன் இடம் பிடித்துள்ளார். கொல்கத்தா அணியில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை.

கொல்கத்தா அணியின் ராகுல் திரிபாதி 33 பந்தில் 45 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். தினேஷ் கார்த்தி அதிரடியாக விளையாடி 11 பந்தில் 26 ரன்கள் அடிக்க கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 20 ஓவரில் ஆறு விக்கெட்டுகள் இழப்புக்கு 171 ரன்கள் சேர்த்தது. நிதிஷ் ராணா 27 பந்தில் 37 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஷர்துல் தாkகூர், ஹசில்வுட் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

பின்னர் 172 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை சூப்பர் கிங்ஸ் களம் இறங்கியது. தொடக்க வீரர்கள் ருதுராஜ் கெய்க் வாட், டு பிளிஸ்சிஸ் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ருதுராஜ் கெய்க்வாட் 28 பந்தில் 40 ரன்களும், டு பிளிஸ்சிஸ் 30 பந்தில் 43 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தார்.

அடுத்து வந்த மொயீன் அலி 28 பந்தில் 32 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதன்பின் வந்த அம்பதி ராயுடு 10 ரன்னிலும், சுரேஷ் ரெய்னா 11 ரன்னிலும், டோனி ஒரு ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு சிக்கல் ஏற்பட்டது.

கடைசி 2 ஓவரில் 26 ரன்கள் தேவைப்பட்டது. 19ஆவது ஓவரை பிரதித் கிருஷ்ணா வீசினார். இந்த ஓவரின் முதல் இரண்டு பந்துகளில் இரண்டு ரன்கள் அடிக்கப்பட்டது. மூன்றாவது மற்றும் நான்காவது பந்தை இமாலய சிக்சருக்கு தூக்கினார் ஜடேஜா. அதோடு மட்டுமல்லாமல் அடுத்த இரண்டு பந்துகளையும் பவுண்டரிக்கு விரட்டினார். இந்த ஓவரில் 22 ரன்கள் கிடைக்க சென்னை அணிக்கு கடைசி ஓவரில் 4 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது.

கடைசி ஓவரை சுனில் நரைன் வீசினார். முதல் பந்தில் சாம் கர்ரன் ஆட்டமிழந்தார். மூன்றாவது பந்தில் ஷர்துல் தாக்கூர் 3 ரன் அடித்தார். ஐந்தாவது பந்தில் ஜடேஜா அவுட் ஆனார். கடைசி பந்தில் தீபக் சாஹர் ஒரு ரன் அடிக்க சென்னை அணி வெற்றி பெற்று பிளேஆப் சுற்றுக்கு முன்னேறியது.

-ராஜ்

ஷாருக்கான் மகனால் பாதிக்கப்பட்ட கலைஞர்கள்!

3 நிமிட வாசிப்பு

ஷாருக்கான் மகனால் பாதிக்கப்பட்ட கலைஞர்கள்!

என் தகப்பன்: நெடுமுடி வேணு பற்றி மம்மூட்டி உருக்கம்!

6 நிமிட வாசிப்பு

என் தகப்பன்: நெடுமுடி வேணு பற்றி  மம்மூட்டி உருக்கம்!

நாகேஷுக்கும் வாலிக்கும் உதவியவர்: ஸ்ரீகாந்த் பற்றி சிவகுமார் ...

3 நிமிட வாசிப்பு

நாகேஷுக்கும் வாலிக்கும் உதவியவர்: ஸ்ரீகாந்த் பற்றி சிவகுமார்

திங்கள் 27 செப் 2021