மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 27 செப் 2021

பஞ்ச் வசனத்துக்காக ‘நண்பன்’ படத்தில் நடிக்க மறுத்த நடிகர்!

பஞ்ச் வசனத்துக்காக ‘நண்பன்’ படத்தில் நடிக்க மறுத்த நடிகர்!

‘பஞ்ச் வசனங்கள் இருக்கு’ என்று கூறுகிற இயக்குநர்களிடம் உடனடியாக நடிகர்கள் கதை கேட்பார்கள். தங்களுக்கு எப்படி வேண்டும் என்பதை கூறி அதற்கு வசதியாக இயக்குநர்கள் மனோநிலையை மாற்றுகிற கதாநாயகர்களும் உண்டு.

தெலுங்குத் திரையுலகத்தில் முன்னணி ஹீரோக்களில் ஒருவர் மகேஷ் பாபு. சென்னையில் பிறந்து வளர்ந்து கல்லூரி வரை இங்கேயே படித்தவர்.

தமிழில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய ‘ஸ்பைடர்’ படம் மூலம் தமிழ் சினிமாவில்அறிமுகமானார் மகேஷ் பாபு. ஆனால், அந்தப் படம் தோல்வியைத் தழுவியது. அதன்பின் தமிழ் சினிமாவில் நடிக்கும் முயற்சியைத் தொடரவில்லை.

‘ஸ்பைடர்’ படத்துக்கு முன்னதாக அவர் ஷங்கர் இயக்கிய ‘நண்பன்’ படத்தில் அறிமுகமாக இருந்தார். அதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வந்த நிலையில், அந்தப் படத்தில் நடிக்க மறுத்துவிட்டார். அதற்கு என்ன காரணம் என்பதை மகேஷ் பாபு அப்போது கூறவில்லை. அந்தப் படத்துக்குப் பதிலாக ‘தூக்குடு’ என்கிற தெலுங்குப் படத்தில் நடித்தார்.

அந்தப் படம் வெளிவந்து பத்து வருடங்கள் ஆனதை முன்னிட்டு படத்தின் இயக்குநர் சீனு வைட்லா சமீபத்திய பேட்டி ஒன்றில் நண்பன் படத்திலிருந்து மகேஷ் பாபு விலகியதற்கான காரணத்தைத் தெரிவித்திருக்கிறார்.

“மகேஷ் பாபு தூக்குடு படப்பிடிப்புக்கு முன்னதாக அவருடைய பண்ணை வீட்டில் நடைபெற்ற விருந்து ஒன்றுக்கு என்னை அழைத்தார். அப்போது அவரிடம் தூக்குடு படத்தில் உள்ள சில பஞ்ச் வசனங்களையும், சில முக்கியக் காட்சிகளைப் பற்றியும் அவரிடம் சொன்னேன்.

அவற்றைக் கேட்டு அவர் வியந்து போனார். உடனே, அவர் மனைவி நம்ரதாவுக்குப் போன் செய்து ஷங்கரின் நண்பன் படத்தில் நடிக்கப் போவதில்லை என்று சொல்லிவிட்டார். என் மீது அவர் வைத்த நம்பிக்கையால் எனது பொறுப்பு இன்னும் அதிகமானது” என்று கூறியுள்ளார்.

மகேஷ் பாபுவின் தெலுங்கு சினிமா படங்களில் ‘தூக்குடு’ படம் மிகப் பெரும் வெற்றி பெற்ற படம். 2011 செப்டம்பர் 23ஆம் தேதியன்று வெளியான அந்தப் படம் வெளிவந்து பத்து ஆண்டுகள் கடந்துவிட்டது.

-இராமானுஜம்

ரெட்டை ஜடையில் அமலா பால்: வைரலாகும் புகைப்படம்!

3 நிமிட வாசிப்பு

ரெட்டை ஜடையில் அமலா பால்: வைரலாகும் புகைப்படம்!

ஆஸ்கார் தகுதிப்பட்டியலில் ஜெய்பீம்!

3 நிமிட வாசிப்பு

ஆஸ்கார் தகுதிப்பட்டியலில் ஜெய்பீம்!

சுசிகணேசன் வழக்கு: சின்மயி - லீனா மணிமேகலைக்கு எதிராக தீர்ப்பு! ...

4 நிமிட வாசிப்பு

சுசிகணேசன் வழக்கு: சின்மயி - லீனா மணிமேகலைக்கு எதிராக தீர்ப்பு!

திங்கள் 27 செப் 2021