மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 27 செப் 2021

கரீனா கபூருக்கு பிரியாணி அனுப்பிய பிரபாஸ்

கரீனா கபூருக்கு பிரியாணி அனுப்பிய பிரபாஸ்

ராதே ஷ்யாம் படத்தை அடுத்து சலார், ஆதி புருஷ் போன்ற படங்களில் நடித்து வருகிறார் பிரபாஸ். மேலும் தன்னுடன் நடிக்கும் நடிகைகளுக்கு சுவையான மதிய உணவுகள் அனுப்பி வைப்பதை அவர் வழக்கமாக வைத்திருக்கிறார். இதை அவருடன் இணைந்து நடித்துள்ள நடிகை ஸ்ருதிஹாசன் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இந்த நிலையில் இந்தி நடிகையான கரீனா கபூருக்கு பிரியாணி அனுப்பி வைத்து அவருக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளார் நடிகர் பிரபாஸ். அதையடுத்து, பாகுபலி நீங்கள் அனுப்பிய சிறந்த உணவுக்கு நன்றி என்று தெரிவித்துள்ள கரீனா கபூர், பிரபாஸ் அனுப்பிய உணவைப் படமெடுத்து அதை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு நன்றி தெரிவித்துள்ளார்.

கரீனா கபூரின் கணவரான சைப் அலிகான் தற்போது பிரபாஸுடன் இணைந்து ஆதிபுருஷ் படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

-அம்பலவாணன்

சித்தார்த் விவகாரத்தில் நடிகை கஸ்தூரி கருத்து!

3 நிமிட வாசிப்பு

சித்தார்த் விவகாரத்தில் நடிகை கஸ்தூரி கருத்து!

‘அழகி-2’: நடிகை நந்திதா தாஸின் ஆசை!

3 நிமிட வாசிப்பு

‘அழகி-2’: நடிகை நந்திதா தாஸின் ஆசை!

100 மில்லியன் பார்வைகளைக் கடந்த ‘டம் டம்’

2 நிமிட வாசிப்பு

100 மில்லியன் பார்வைகளைக் கடந்த ‘டம் டம்’

திங்கள் 27 செப் 2021