மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 27 செப் 2021

மூவாயிரம் கிலோ ஹெராயினும் ஒரு சினிமாவும்: அப்டேட் குமாரு

மூவாயிரம் கிலோ ஹெராயினும் ஒரு சினிமாவும்: அப்டேட் குமாரு

இளைஞர்கள் போதைக்கு அடிமையாகுறதால தமிழர்கள் குழந்தை பெத்துக்க முடியாம போயிடும்னு ஒரு படத்தைப் பாத்துட்டு நம்ம ஹெச்.ராஜா சொல்லியிருக்காரு. பாவம் ராஜாஜி.... குஜராத்ல அதானி கட்டுப்பாட்ல இருக்குற துறைமுகத்துல மூவாயிரம் கிலோ ஹெராயின் பிடிபட்ட செய்தியைப் பாத்துட்டு என்ன சொல்லுவாரோ...

நீங்க அப்டேட் பாருங்க

மயக்குநன்

சிறுவயதில் தந்தைக்கு உதவியாக ரயில் நிலையத்தில் டீ விற்றுக் கொண்டிருந்தேன்!- பிரதமர் மோடி.

இப்ப... இந்தியாவோட பிராப்பர்ட்'டீ'யை எல்லாம் வித்துக்கிட்டு இருக்காரு..!

balebalu

ஸ்மார்ட் போன் வந்த பிறகு விடுமுறை நாட்கள் கூட

வேலை நாட்களாக மாறி விட்டன

-சோசியல்மீடியா

ஜோக்கர்...

ஐ. நாவில் ஹிந்தியில் பேசி அதிரடி காட்டினார்.

ஏன்?

~ ஏன்னா இங்கிலீஷ்ல பேச வராது.

amudu

இரண்டு மணி நேரம் கார்ட்டூன் படம் பார்க்கும் போது வராத நெட் ஒர்க் பிரச்சினை, நாற்பது நிமிட ஆன்லைன் கிளாஸ்களில் வந்து விடுகிறது குழந்தைகளுக்கு.

ரஹீம் கஸ்ஸாலி

வாய்ப்பு என்பது சிலருக்கு வாயால் வரும். சிலருக்கு வாயால் கெடும். அதனால்தான் அதுக்கு “வாய்”ப்பு என்று பெயர் வைத்தார்களோ?

பர்வீன் யூனுஸ்

இப்படியே போனால், விஜய் சேதுபதியின் அடுத்த பட டைட்டில் இதுவாக இருக்கலாம்..நடுவுல கொஞ்சம் 'ஹிட்'டைக் காணோம்.

நாகராஜசோழன்.MA.MLA

அழுத பிள்ளைக்கு மட்டுமல்லாது, அழாத பிள்ளைக்கும் பால் கொடுக்கும் தாயாக திமுக அரசு இருக்கும்!-முதலமைச்சர்

E.P.S மைண்ட் வாய்ஸ்~

அப்பறம் ஏன் சார் என்னை மட்டும் அழ வெச்சு பாக்கறீங்க!

கடைநிலை ஊழியன்

என்ன ஜி.. நைட்டோட நைட்டா நாடாளுமன்ற கட்டிடத்தை பாக்க போயிட்டிங்க.. ?

அது ஒன்னும் இல்ல.. white house நல்லா இருந்துச்சு.. அமெரிக்கா ல இருந்து வரும்போதே ஒரே யோசனை.. அதான் plan ன கொஞ்சம் மாத்தலாம்னு போய் பாத்தேன்.

balebalu

பள்ளிகள் வழியே குழந்தைகளுக்கு கொரோனா பரவும் வாய்ப்பு குறைவு - விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன்

ஆமா ! "டெஸ்ட் வைப்பாங்க" ன்னு கொரோனா க்கும் பயம் வருமில்ல Winking face with tongue

-schoolsreopen

Mannar & company

நடப்பாண்டில் தீபாவளி சிறப்பு விற்பனை ரூ.200 கோடியை இலக்காக நிர்ணயித்தது தமிழ்நாடு அரசின் "கோ-அப்டெக்ஸ்" நிறுவனம்!

--செய்தி

ஆனாலும் வெற்றிப் பெறுவது என்னவோ "டாஸ்மாக்"காதான் இருக்கும்.

PrabuG

நைட்டானா காலையில ஜாகிங் போகனும்னு முடிவு பண்ற வியாதி இல்லாத ஆட்கள் வெகு சிலர்தான் போல..

ச ப் பா ணி

சிந்தனை சீக்கிரம் அப்லோடு ஆகிவிடுகிறது

செயல்பாடு டவுன்லோடு ஆகத்தான் லேட்டாகிறது

மயக்குநன்

பண்டிகை காலத்தில் மக்கள் உஷாராக இருக்க வேண்டும்!- பிரதமர் மோடி.

ஆகா... இன்னொரு கிட்னியையும் எடுக்க ஏதோ பிளான் பண்ணுற மாதிரி தெரியுதே..?!

லாக் ஆஃப்

ரெட்டை ஜடையில் அமலா பால்: வைரலாகும் புகைப்படம்!

3 நிமிட வாசிப்பு

ரெட்டை ஜடையில் அமலா பால்: வைரலாகும் புகைப்படம்!

ஆஸ்கார் தகுதிப்பட்டியலில் ஜெய்பீம்!

3 நிமிட வாசிப்பு

ஆஸ்கார் தகுதிப்பட்டியலில் ஜெய்பீம்!

சுசிகணேசன் வழக்கு: சின்மயி - லீனா மணிமேகலைக்கு எதிராக தீர்ப்பு! ...

4 நிமிட வாசிப்பு

சுசிகணேசன் வழக்கு: சின்மயி - லீனா மணிமேகலைக்கு எதிராக தீர்ப்பு!

திங்கள் 27 செப் 2021