மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 27 செப் 2021

அரசியல் சதுரங்கத்திற்குள் ருத்ரதாண்டவம்!

அரசியல் சதுரங்கத்திற்குள்  ருத்ரதாண்டவம்!

கடந்த இரண்டு வாரங்களாக சமூக வலைதளங்களிலும், அரசியல் வட்டாரத்திலும் ‘ருத்ர தாண்டவம்’ படத்தின் முன்னோட்டம் விவாத பொருளாகியிருக்கிறது. இந்நிலையில் அக்டோபர் 1 அன்று தமிழகம் முழுவதும் 400 திரையரங்குகளில் படத்தை திரையிட ஏற்பாடுகள் நடந்து வருகிறது

சுமார் 6 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்ட ருத்ரதாண்டவம், 20 கோடி ரூபாய்க்கு மேல் வியாபாரம் செய்யப்பட்டிருப்பதாக விநியோகஸ்தர்கள் வட்டாரம் தெரிவிக்கிறது.

நட்சத்திர அந்தஸ்து, வியாபார முக்கியத்துவமுள்ள நடிகர் நடிகைகள் இந்தப் படத்தில் நடிக்கவில்லை. இயக்குநர் கௌதம்மேனன், ராதாரவி தம்பி ராமைய்யா இவர்களுடன் கதையின் நாயகனாக நடித்துள்ள ரிச்சர்ட் ஆகியோர் மட்டுமே பிரபலமானவர்கள்.

இப்படத்தின் இயக்குநர் மோகன்ஜி இயக்கத்தில் வெளியான திரெளபதி படம், நாடகக் காதல் குறித்து பேசியது. இதற்கு பலத்தை ஆதரவு, பலத்த எதிர்ப்பு என ஒருசேர விமர்சனங்கள் எழுந்தன. இருந்தபோதிலும் 45 லட்சத்தில் தயாரிக்கப்பட்ட இப்படம் தமிழகத்தில் 15 கோடி வரை வசூல் செய்து வரலாற்று சாதனையை நிகழ்த்தியது. எந்த ஒரு தமிழ் படமும் வசூல் அடிப்படையில்இது போன்ற சாதனை நிகழ்த்தவில்லை.

இதன் காரணமாகவே மோகன்ஜீ இயக்கியுள்ள ருத்ரதாண்டவம் எதிர்பார்ப்பை ஏற்படுத்த காரணமானது. இப்படம் பற்றிய ஒரு கேள்விக்கு பதில் கூறிய பாரதிய ஜனதா கட்சி தலைவர்களில் ஒருவரான எச்.ராஜா இந்துக்கள் அனைவரும் தியேட்டரில் இந்தப் படத்தை பார்க்க வேண்டும் என பதில்கூற அரசியல்வாதிகளின் பார்வை ருத்ரதாண்டவம் படத்தின் மீது கவனத்தை திருப்ப காரணமானது.

பாஜக, பாமக, மற்றும் இந்து மக்கள் கட்சியை சேர்ந்தவர்கள் ருத்ரதாண்டவம் படத்துக்கு ஆதரவான நிலையில் பேச தொடங்கினார்கள்.

வன்கொடுமை தடுப்புச் சட்டம் தவறான முறையில் பயன்படுத்தப்படுவதாகவும், இந்து மதம் இழிவு செய்யப்படுவதாகவும், மதமாற்றம் குறித்தும் டிரெய்லரில் காட்சிகள் இருந்தன. இதற்கு பாராட்டும், எதிர்ப்பும் சரிசமமாக கிடைத்தன.

இந்நிலையில் ருத்ர தாண்டவம் ட்ரெய்லரை ட்விட்டரில் வெளியிட்டு, ‘தமிழகத்தில் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வந்துள்ள ருத்ரதாண்டவம் வெற்றி பெற்றிட எனது வாழ்த்துக்கள்’ என பதிவிட்டார் பா.ஜ.க.வின் எச்.ராஜா.

அதற்கு ஒருவர், ‘இப்படம் நிச்சயமாக தமிழ்நாட்டில் திரைக்கு வராது’ என்று பின்னூட்டம் இட்டார். அதற்கு ராஜா, ‘வரும் வரவைப்போம் என பதிலளித்திருந்தார்.

இப்படி பரபரப்பை கிளப்பிய ருத்ரதாண்டவம் திரைப்படம் இன்று காலை 11 மணிக்கு சென்னை பிரசாத் பிரிவியூ திரையரங்கில் சிறப்பு காட்சியாக திரையிடப்பட்டது. இதில் எச்.ராஜா, ராதாரவி, சித்தர் திருத்தணிகாசலம், திரைப்பட நடிகர் ராதாரவி, வழக்கறிஞர் சங்கத் தலைவர் பால் கனகராஜ், இந்து மக்கள் கட்சித்தலைவர் அர்ஜூன் சம்பத் ஆகியோர் படம் பார்த்தனர்.

-இராமானுஜம்

ரஜினி பாடல் காட்சிகள் அதிகம் விரும்பப்படவில்லையா?

4 நிமிட வாசிப்பு

ரஜினி பாடல் காட்சிகள் அதிகம் விரும்பப்படவில்லையா?

மானநஷ்ட வழக்கு தொடுத்த நடிகை சமந்தா

3 நிமிட வாசிப்பு

மானநஷ்ட வழக்கு தொடுத்த நடிகை சமந்தா

‘எனிமி’க்கு எனிமியான அண்ணாத்த

10 நிமிட வாசிப்பு

‘எனிமி’க்கு எனிமியான அண்ணாத்த

திங்கள் 27 செப் 2021