மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 27 செப் 2021

திருப்பதியில் நயன்தாரா-விக்னேஷ் சிவன்

திருப்பதியில் நயன்தாரா-விக்னேஷ் சிவன்

நடிகை நயன்தாரா, தனது காதலரும் இயக்குநருமான விக்னேஷ் சிவனுடன் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்தார்.

கேரளாவை சேர்ந்த நடிகை நயன்தாரா ஐயா என்ற படத்தில் அறிமுகமாகி, தமிழ் சினிமாவில் ரஜினிகாந்த், விஜய், அஜித், சூர்யா, சிம்பு, தனுஷ் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். தற்போது தமிழ் திரையுலகின் நம்பர் ஒன் நடிகையாக திகழ்ந்து வருகிறார்.

இந்நிலையில், இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ’நானும் ரவுடிதான்’ என்ற படத்தில் நயன்தாரா நடித்தார். அப்போது, இயக்குநர் விக்னேஷ் சிவனுக்கும், நயன்தாராவுக்கும் இடையே காதல் ஏற்பட்டது.

பல வருடங்களாக காதலர்களாக வலம் வரும் நயன்தாராவுக்கும், விக்னேஷ் சிவனுக்கும் எப்போது திருமணம் நடக்கும் என்பதுதான் ரசிகர்களின் கேள்வியாக இருந்து வருகிறது.

சமீபத்தில், தனியார் தொலைகாட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட நயன்தாரா தனக்கு நிச்சயார்த்தம் முடிந்த விஷயத்தை கூறினார்.

இவர்கள் இருவரும் திருப்பதி கோயில் உள்ளிட்ட வெளியூர்களுக்கு அடிக்கடி செல்வது வழக்கம். அதுபோன்று இன்று(செப்டம்பர் 27) திருப்பதி ஏழுமலையான் கோயிலில் விஐபி தரிசனம் மூலம் சுவாமி தரிசனம் செய்தனர்.

பின்பு, ரங்கநாயக மண்டபத்தில் வேதங்கள் முழங்க தேவஸ்தான பிரசாதம் அவர்களுக்கு வழங்கப்பட்டது.

தொடர்ந்து கோயிலுக்கு வெளியே வந்த அவர்கள் ரசிகர்களுடன் செல்பி எடுத்துக் கொண்டனர். தற்போது இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ரஜினிகாந்தின்’அண்ணாத்த’ மற்றும் விக்னேஷ் சிவனின்’காத்து வாக்குல ரெண்டு காதல்’ ஆகிய படங்களில் நயன்தாரா தற்போது நடித்து வருகிறார்.

-வினிதா

புதிய ஐபிஎல் அணிகள்: சர்ச்சைப் பின்னணி!

7 நிமிட வாசிப்பு

புதிய ஐபிஎல் அணிகள்:  சர்ச்சைப் பின்னணி!

சமந்தாவுக்கு உதவும் ஷில்பா ஷெட்டி வழக்கின் தீர்ப்பு!

3 நிமிட வாசிப்பு

சமந்தாவுக்கு உதவும் ஷில்பா ஷெட்டி வழக்கின் தீர்ப்பு!

டி20 உலகக் கோப்பை: இரண்டாவது வெற்றியைப் பதிவுசெய்த பாகிஸ்தான்! ...

3 நிமிட வாசிப்பு

டி20 உலகக் கோப்பை: இரண்டாவது வெற்றியைப் பதிவுசெய்த பாகிஸ்தான்!

திங்கள் 27 செப் 2021