மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 27 செப் 2021

ஐபிஎல்: மும்பையைச் சாய்த்த பெங்களூரு!

ஐபிஎல்: மும்பையைச் சாய்த்த பெங்களூரு!

ஐபிஎல் 2021யில் நேற்று (செப்டம்பர் 26) இரண்டு போட்டிகள் நடைபெற்றன. 7.30 மணிக்கு நடந்த இரண்டாவது ஆட்டத்தில் மும்பை அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூரு அணி 54 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

ஐபிஎல் போட்டியின் நேற்றைய 39ஆவது ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியுடன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி மோதியது. இதில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா முதலில் பந்து வீச்சைத் தேர்வு செய்தார். இதையடுத்து பெங்களூரு அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக விராட் கோலி மற்றும் தேவ்தத் படிக்கல் களமிறங்கினர்.

நட்சத்திர வீரர் படிக்கல் டக் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். பவர்பிளே முடிவில் பெங்களூரு அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 48 ரன்கள் எடுத்தது. சிறப்பாக ஆடிய விராட் கோலி 40 பந்துகளில் அரை சதம் கடந்து அசத்தினார். அவர் 42 பந்துகளில் 3 பவுண்டரிகள், 3 சிக்சர்களுடன் 51 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

சிறப்பாக ஆடிய மேக்ஸ்வெல் 37 பந்துகளில் 6 பவுண்டரிகள், 3 சிக்சர்களுடன் 56 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இறுதியாக 20 ஓவர்கள் முடிவில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 165 ரன்கள் எடுத்தது. மும்பை அணி தரப்பில் அதிகபட்சமாக ஜஸ்பிரித் பும்ரா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ராகுல் சாஹர், டிரென்ட் போல்ட் மற்றும் ஆடம் மில்னே தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.

இதை அடுத்து 166 ரன்கள் என்ற இலக்கை நோக்கி மும்பை இந்தியன்ஸ் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாகக் களமிறங்கிய ரோகித் சர்மா மற்றும் குவிண்டன் டிகாக் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இந்த நிலையில் 24 ரன்களில் குவிண்டன் டிகாக் கேட்ச் ஆகி வெளியேறினார்.

இதன் பிறகு மும்பை அணிக்கு மளமளவென விக்கெட்டுகள் சரிய ஆரம்பித்தது. இஷான் கிஷன் 9 ரன்களில் சாஹல் பந்துவீச்சில் அவுட் ஆனார். அடுத்து வந்த சூர்யகுமார் யாதவ் 8 ரன்களில் வெளியேறினார். குருனால் பாண்டியா 8 ரன்களில் போல்டு ஆனார்.

இதைத் தொடர்ந்து ஹர்ஷத் பட்டேல் 17ஆவது ஓவரில் ஹர்திக் பாண்டியா (3), பொல்லார்ட் (7), ராகுல் சாஹர் (0) ஆகியோரின் ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இறுதியாக 18.1 ஓவர்களில் மும்பை அணி அனைத்து விக்கெட்டுகளை இழந்து 111 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் பெங்களூரு அணி 54 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இன்று (செப்டம்பர் 27) இரவு 7.30 மணிக்கு துபாயில் நடைபெறும் 40ஆவது லீக் ஆட்டத்தில் ஹைதராபாத் அணியும், ராஜஸ்தான் அணியும் மோதுகின்றன.

-ராஜ்

சித்தார்த் விவகாரத்தில் நடிகை கஸ்தூரி கருத்து!

3 நிமிட வாசிப்பு

சித்தார்த் விவகாரத்தில் நடிகை கஸ்தூரி கருத்து!

‘அழகி-2’: நடிகை நந்திதா தாஸின் ஆசை!

3 நிமிட வாசிப்பு

‘அழகி-2’: நடிகை நந்திதா தாஸின் ஆசை!

100 மில்லியன் பார்வைகளைக் கடந்த ‘டம் டம்’

2 நிமிட வாசிப்பு

100 மில்லியன் பார்வைகளைக் கடந்த ‘டம் டம்’

திங்கள் 27 செப் 2021