மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 26 செப் 2021

பவர் ஸ்டார் பட்டத்தை துறந்த நடிகர்!

பவர் ஸ்டார் பட்டத்தை துறந்த நடிகர்!

தங்கள் பெயருக்கு பின் படித்த படிப்புகளை போட்டுக்கொள்ளும் பழக்கம் தமிழகத்தில் பிரசித்தம். அதேபோன்று ஒரு படத்தில் கதாநாயகனாக நடித்துவிட்டாலே அடைமொழி பட்டம் போட்டுக்கொள்ளும் வியாதி தமிழ் சினிமாவில் வழக்கமாகிவிட்டது. தியாகராஜ பாகவதர், சிவாஜிகணேசன், எம்.ஜி.ஆர் இவர்களுக்கு தகுதியின் அடிப்படையிலேயே ஏழிசை புலவர், நடிகர்திலகம், மக்கள் திலகம் என அடைமொழி சேர்க்கப்பட்டது.

இன்றைய சமகால கதாநாயகன்கள் தங்கள் பெயருக்கு முன் போடப்படும் அடைமொழிக்கு தகுதியானவர்கள் தானா என்கிற கேள்வி திரையுலகில் தொக்கி நிற்கிறது. இவற்றை உணர்ந்ததால்தான் தெலுங்கு திரையுலகில் பவர் ஸ்டார் என கடந்த

20 வருடங்களுக்கும் மேலாக அழைக்கப்படுபவர் பவன் கல்யாண். நடிகர் சிரஞ்சீவியின் தம்பியான பவன் கல்யாணுக்கு தெலுங்கு பேசும் மாநிலங்களில் பெரும் ரசிகர் கூட்டம் உண்டு.

2019 சட்டசபை தேர்தலில் ஆந்திராவில் அவரது கட்சி போட்டியிட்டு பெரும் தோல்வியை சந்தித்தது. போட்டியிட்ட இரண்டு தொகுதிகளிலும் பவன் கல்யாண் தோற்கடிக்கப்பட்டார்.

இந்நிலையில் இனி திரைப்படங்களில் தன் பெயருக்கு முன்னால் 'பவர் ஸ்டார்' என்ற பட்டப் பெயரைப் போட வேண்டாம் என சொல்லிவிட்டதாக தெலுங்கு திரையுலகில் கூறப்பட்டு வந்தது. அதற்கான காரணம் தற்போது தெரிய வந்துள்ளது.

பவன் கல்யாணின் அக்கா மகன் சாய் தரம் தேஜ் நடித்து வெளிவர உள்ள 'ரிபப்ளிக்' படத்தின் விழாவில் கலந்து கொண்டு பவன் பேசுகையில், ”நீங்கள் எப்போதெல்லாம் 'பவர் ஸ்டார்' என்று குரல் எழுப்புகிறீர்களோ, அப்போதெல்லாம், 'பவர்' இல்லாமல் எதற்கு 'பவர் ஸ்டார்' என அழைக்கப்பட வேண்டும் என யோசித்துள்ளேன். உங்களால் 'முதல்வர்' என்று அழைக்கப்படுவதற்காக நான் இங்கு இல்லை” என உணர்ச்சிவசப்பட்டு பேசினார்.

இவ்வளவு ரசிகர்கள் இருந்தும், தேர்தலில் தோல்வியடைந்தது குறித்தும், ஆட்சியைப் பிடிக்க முடியாதது குறித்து அவர் அப்படி பேசியுள்ளதாக தெலுங்கு திரையுலக வட்டாரத்தில் கூறுகின்றனர்.

-இராமானுஜம்

ரெட்டை ஜடையில் அமலா பால்: வைரலாகும் புகைப்படம்!

3 நிமிட வாசிப்பு

ரெட்டை ஜடையில் அமலா பால்: வைரலாகும் புகைப்படம்!

ஆஸ்கார் தகுதிப்பட்டியலில் ஜெய்பீம்!

3 நிமிட வாசிப்பு

ஆஸ்கார் தகுதிப்பட்டியலில் ஜெய்பீம்!

சுசிகணேசன் வழக்கு: சின்மயி - லீனா மணிமேகலைக்கு எதிராக தீர்ப்பு! ...

4 நிமிட வாசிப்பு

சுசிகணேசன் வழக்கு: சின்மயி - லீனா மணிமேகலைக்கு எதிராக தீர்ப்பு!

ஞாயிறு 26 செப் 2021