மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 26 செப் 2021

’டாக்டர்’ எதை பற்றி பேசுகிறது?

’டாக்டர்’ எதை பற்றி பேசுகிறது?

கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ், சிவகார்த்திகேயன் இணைந்து தயாரித்துள்ள படம் டாக்டர். இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன் நாயகனாக நடிக்க, நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், பிரியங்கா அருள் மோகன், வினய், யோகி பாபு, மிலிந்த் சோமன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

கொரோனா ஊரடங்கு காரணமாக தியேட்டர்கள் மூடப்பட்டதால் இப்படத்தை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டு வந்தது. ஒரு வழியாக அக்டோபர் 9 அன்று டாக்டர் படம் தியேட்டருக்கு வரவுள்ளது.

இப்படத்தின் டிரைலர் நேற்று வெளியானது. மீண்டும் ஒரு மனிதக் கடத்தல் மற்றும் உடல் உறுப்பு தொடர்பான கதையாக இந்தப் படம் இருக்கும் என டிரைலரைப் பார்க்கும்போது தெரிகிறது.

ஏற்கெனவே இப்படி மனிதக் கடத்தலை மையமாக வைத்து வந்த காக்கிச் சட்டை படத்தில் சிவகார்த்திகேயன்தான் கதாநாயகனாக நடித்திருந்தார்.

அஜித் நடித்த என்னை அறிந்தால் படமும் அது மாதிரியான கதைதான். செப்டம்பர் 24 அன்று வெளியான சின்னஞ்சிறு கிளியே படமும் அந்த வகை கதைத்தான். இதுபோன்று மனித உறுப்புகள் திருட்டு சம்பந்தமான படங்கள் தமிழில் தொடர்ந்து வந்து கொண்டுதான் உள்ளது.

சிவகார்த்திகேயன் ஒரு டாக்டர், வினய் ஒரு வில்லன், இவர்கள் இருவருக்கும் இடையில் தான் பிரச்சினையா, வினய்க்கும் மேல் ஒரு வில்லன் இருக்கிறாரா என்பது சஸ்பென்ஸ்.

கதாநாயகி பிரியங்கா, இளவரசு, தீபா, அர்ச்சனா உள்ளிட்டோர் அடங்கிய குழு தங்களை ஒரு குடும்பம் என சொல்லிக் கொண்டு சிவகார்த்திகேயனுக்கு உதவியாக சில பல வேலைகளைச் செய்கிறார்கள் என்பதை டிரைலர் பார்க்கும் போது உணரமுடிகிறது .

கடத்தல், ஆக்க்ஷன், த்ரில்லர் என பரபரப்பான கமர்ஷியல் படமாக இருக்கும் எனத் தெரிகிறது. நெல்சன் திலீப்குமார் இயக்கிய முதல் படமான கோலமாவு கோகிலா படமும் போதைப் பொருள் கடத்தலைப் பற்றிய படமாக இருந்தது.

அவரது இந்த இரண்டாவது படத்தையும் ஒரு கடத்தல் படமாகவே எடுத்திருக்கிறார் என்பது தெரிகிறது. மூன்றாவது படமாக இயக்கிக் கொண்டிருக்கும் விஜய் நடிக்கும் பீஸ்ட் படமும் கடத்தல் படம் தானோ என்கிற கேள்வி எழுவதை தடுக்க முடியவில்லை. டிரைலரில் அனிருத் இசையில் எந்தப் பாடல்களும் இடம் பெறாதது ஆச்சரியம் தான்.

சிவகார்த்திகேயன் நடித்த ஹீரோ படம் கடந்த 2019ஆம் வருடம் டிசம்பர் மாதம் வெளிவந்தது. ஏறக்குறைய இரண்டு வருடங்களுக்குப் பிறகு அவர் நடிக்கும் ஒரு படம் வெளிவர உள்ளது. ஹீரோ வெற்றிபெறவில்லை அந்த குறையை டாக்டர் மாற்றுவாரா?

-இராமானுஜம்

ரெட்டை ஜடையில் அமலா பால்: வைரலாகும் புகைப்படம்!

3 நிமிட வாசிப்பு

ரெட்டை ஜடையில் அமலா பால்: வைரலாகும் புகைப்படம்!

ஆஸ்கார் தகுதிப்பட்டியலில் ஜெய்பீம்!

3 நிமிட வாசிப்பு

ஆஸ்கார் தகுதிப்பட்டியலில் ஜெய்பீம்!

சுசிகணேசன் வழக்கு: சின்மயி - லீனா மணிமேகலைக்கு எதிராக தீர்ப்பு! ...

4 நிமிட வாசிப்பு

சுசிகணேசன் வழக்கு: சின்மயி - லீனா மணிமேகலைக்கு எதிராக தீர்ப்பு!

ஞாயிறு 26 செப் 2021