மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 26 செப் 2021

நாகசைதன்யா குடும்ப நிகழ்வில் கலந்துகொள்ளாத சமந்தா

நாகசைதன்யா குடும்ப நிகழ்வில் கலந்துகொள்ளாத சமந்தா

தமிழ், தெலுங்கு என இரண்டு சினிமா உலகத்திலும் சமந்தா, நாகசைதன்யா தம்பதியரைப் பற்றிய செய்தி கடந்த ஒரு மாதமாக இடம் பெற்று வருகின்றன.

இருவரும் பிரிய உள்ளதாகவும், பிரிந்துவிட்டதாகவும், விரைவில் விவாகரத்து, 50 கோடி ஜீவனாம்சம் என ஒவ்வொரு நாளும் செய்திகள் வெளியிடப்பட்டு வருகிறது. இதுபோன்ற செய்திகளை முடிவுக்கு கொண்டுவரும் வகையில் நாகசைதன்யா, சமந்தா இருவரும் எந்தவொரு நேரடியான பதிலையும் இதுவரை கூறவில்லை.

என்ன தான் நடிகையாக இருந்தாலும் திருமணமான, குடும்ப பெண்ணான சமந்தா சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வரும் அவரது புகைப்படங்கள் கண்களை கூச வைப்பதாக உள்ளது. கூடி வாழும் எண்ணம் இருந்தால் இப்படியெல்லாம் புகைப்படங்களை வெளியிடுவாரா என்கிற விமர்சனத்தில் சமந்தா வறுபட்டுக்கொண்டிருக்கிறார்.

அவற்றிற்கு இன்னும் எண்ணெய் ஊற்றுவது போல சில சம்பவங்களும் நடக்கின்றன. சமீபத்தில் நாக சைதன்யா நடித்து செப்டம்பர் 24 அன்று வெளிவந்துள்ள 'லவ் ஸ்டோரி' படத்தின் நிகழ்ச்சிக்கு ஆமீர் கான் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

அவருக்கு ஐதராபாத்தில் நாகார்ஜுனா குடும்பத்தினர் விருந்து அளித்தனர். அதில் நாகார்ஜுனா, அவரது மனைவி அமலா, மகன்கள் நாக சைதன்யா, அகில் மற்றும் 'லவ் ஸ்டோரி' பட இயக்குனர் சேகர் கம்முலா, படத்தின் கதாநாயகி சாய் பல்லவி ஆகியோர் கலந்து கொண்டனர்.

அந்த விருந்தில் சமந்தா காணப்படவில்லை. அந்த புகைப்படங்கள் இப்போது சமூக வலைத்தளங்களில் பரவி சமந்தா, நாக சைதன்யா விவகாரத்து விவகாரத்தை உறுதிப்படுத்தும் செய்திக்கு உரமிடுவதாக அமைந்துள்ளது.

ஆமீர்கான் நடித்து வரும் 'லால் சிங் சட்டா' என்ற இந்திப்படத்தில் அவருடன் நாகசைதன்யாவும் நடித்து வருகிறார்.

அம்பலவாணன்

சிவகார்த்திகேயன் எதிர்பார்க்காத டாக்டர் வசூல்!

5 நிமிட வாசிப்பு

சிவகார்த்திகேயன் எதிர்பார்க்காத டாக்டர் வசூல்!

ஜெய் பீம் கதைக்களம்!

2 நிமிட வாசிப்பு

ஜெய் பீம்  கதைக்களம்!

10 ஆண்டுகளுக்குப் பின் நடிக்கும் வாணி விஸ்வநாத்

2 நிமிட வாசிப்பு

10 ஆண்டுகளுக்குப் பின் நடிக்கும் வாணி விஸ்வநாத்

ஞாயிறு 26 செப் 2021