மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 25 செப் 2021

ஐபிஎல்: கோலி அணியை வீழ்த்திய டோனி அணி!

ஐபிஎல்: கோலி அணியை வீழ்த்திய டோனி அணி!

விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கும் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் ஷார்ஜாவில் நடைபெற்ற ஐபிஎல் தொடரின் 35ஆவது லீக் ஆட்டத்தில் டோனி அணி ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

ஐபிஎல் கிரிக்கெட்டின் நேற்றைய (செப்டம்பர் 24) ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் களமிறங்கின.

மணல் புயல் வீசியதால் டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டது. பின்னர் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்து வீச்சைத் தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய பெங்களூரு அணியின் தொடக்க வீரர்கள் படிக்கல் மற்றும் கேப்டன் விராட் கோலி ஆரம்பம் முதலே அதிரடியாக ஆடினர். இவர்களின் அதிரடி ஆட்டத்தால் பெங்களூரு அணி பவர்பிளே முடிவில் விக்கெட் இழப்பின்றி 55 ரன்கள் குவித்தது.

சிறப்பாக ஆடிய கேப்டன் விராட் கோலி அரை சதம் விளாசினார். அவர் 53 ரன்கள் எடுத்திருந்த நிலையில் பிராவோ பந்துவீச்சில் வெளியேறினார். அடுத்து வந்த டிவில்லியர்ஸ் 12 ரன்களில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அதிரடியாக ஆடிய படிக்கல் 50 பந்துகளில் 5 பவுண்டரிகள், 3 சிக்சர்களுடன் 70 ரன்கள் குவித்து ஷர்துல் தாக்கூர் பந்து வீச்சில் அவுட் ஆனார்.

பின்னர் வந்த பெங்களூரு வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இதனால், இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ஆறு விக்கெட்டுகள் இழப்புக்கு 156 ரன்கள் எடுத்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் பிராவோ மூன்று விக்கெட்டுகளும், ஷர்துல் தாகூர் இரண்டு விக்கெட்டுகளும் தீபக் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதையடுத்து, 157 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணி களமிறங்கியது. கெயிக்வாட், டு பிளசிஸ் ஜோடி அதிரடியாக ஆடியது. முதல் விக்கெட்டுக்கு 71 ரன்கள் சேர்த்தது. கெயிக்வாட் 38 ரன்னிலும், டு பிளசிஸ் 31 ரன்னிலும் அவுட்டாகினர். அடுத்து ஆடிய மொயீன் அலி 23 ரன்னில் வெளியேறினார். பொறுப்புடன் ஆடிய அம்பதி ராயுடு 32 ரன்னில் வீழ்ந்தார்.

அடுத்து ரெய்னாவுடன் எம்.எஸ்.டோனி ஜோடி சேர்ந்தார். இருவரும் இணைந்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்து சென்றனர்.

இறுதியில், சென்னை அணி நான்கு விக்கெட்டுகள் இழப்புக்கு 157 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. ரெய்னா 17 ரன்னும், டோனி 11 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர். இந்த வெற்றியுடன் புள்ளிப் பட்டியலில் சென்னை அணி மீண்டும் முதலிடம் பிடித்தது.

இன்று (செப்டம்பர் 25) இரண்டு ஆட்டங்கள் நடைபெறுகின்றன. மாலை 3.30 மணிக்குத் தொடங்கும் 36ஆவது லீக் ஆட்டத்தில் டெல்லி அணியும் ராஜஸ்தான் அணியும் மோதுகின்றன. இரவு 7.30 மணிக்குத் தொடங்கும் 37ஆவது லீக் ஆட்டத்தில் ஹைதராபாத் அணியும் பஞ்சாப் அணியும் மோதுகின்றன.

-ராஜ்

சிவகார்த்திகேயன் எதிர்பார்க்காத டாக்டர் வசூல்!

5 நிமிட வாசிப்பு

சிவகார்த்திகேயன் எதிர்பார்க்காத டாக்டர் வசூல்!

ஜெய் பீம் கதைக்களம்!

2 நிமிட வாசிப்பு

ஜெய் பீம்  கதைக்களம்!

10 ஆண்டுகளுக்குப் பின் நடிக்கும் வாணி விஸ்வநாத்

2 நிமிட வாசிப்பு

10 ஆண்டுகளுக்குப் பின் நடிக்கும் வாணி விஸ்வநாத்

சனி 25 செப் 2021