மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 25 செப் 2021

மிடில்கிளாஸ் பையனின் பயணம் 'சிவகுமாரின் சபதம்'!

மிடில்கிளாஸ் பையனின் பயணம் 'சிவகுமாரின் சபதம்'!

ஹிப்ஹாப் ஆதி கதாநாயகனாக நடித்து இயக்கியிருக்கும் திரைப்படம் ‘சிவகுமாரின் சபதம்’ இப்படம், செப்டம்பர் 30 முதல் உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படத்தின் வெளியீட்டை ஒட்டி படக்குழுவினர் சென்னையில் பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர்

இந்நிகழ்வில் தயாரிப்பாளர் சத்யஜோதி தியாகராஜன் பேசியதாவது,

கொரோனா நம் வாழ்க்கையை மாற்றிவிட்டது. பட்டாசு திரைப்படத்திற்கு பிறகு, இப்போது மீண்டும் உங்கள் அனைவரையும் பார்ப்பது மகிழ்ச்சி. ஆதி படங்களை தியேட்டரில் பார்த்திருக்கிறேன். ‘நட்பே துணை’ படத்தை பார்த்தேன் மிகவும் பிடித்திருந்தது. அந்த படத்தில் துணை கதாப்பாத்திரங்களுக்கு கூட நிறைய வரவேற்பு கிடைத்தது.

இந்த படத்தின் கதையை எனது மகன் தான் முழுதாக கேட்டார். அவருக்கு மிகவும் பிடித்திருந்தது. படம் முழுதாக முடிந்த பிறகு பார்த்தேன் இரண்டாம் பகுதி என்னை மிகவும் பாதித்தது ஆதியை மனமார பாராட்டினேன். மூன்றாம் பிறை படத்திற்கு பிறகு இந்தப்படம் தான் என்னை அதிகம் பாதித்தது.

கொரோனாவால் திரையரங்குகள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. நல்ல படங்கள் தியேட்டரில் பார்த்தால் தான், நாம் அதை ரசிக்க முடியும். அதனால் தான் காத்திருந்து இப்படத்தை தியேட்டரில் வெளியிடுகிறோம்" என்றார்

நடிகர் ஆதித்யா கதிர் பேசியதாவது...

"இப்படத்தில் அனைவரும் ஒரு குடும்பம் போலவே இருந்தோம். ஆதி என்னுடைய ரசிகர் என்று சொல்லி போன படத்தில் வாய்ப்பு தந்தார். இந்த படத்தில் பெரிய கேரக்டர் கொடுத்துள்ளார். மேலும் ஒரு பெரிய பொறுப்பு ஒன்றை கொடுத்தார். படப்பிடிப்பில் அனைவரையும் ஒருங்கிணைத்து அனைவரையும் அரவணைத்து செல்லும் பொறுப்பை தந்தார். ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக இருந்தார்கள் அனைவருடனும் பழகியது நன்றாக இருந்தது. ஆதி அண்ணா ஒவ்வொரு காட்சியையும் செதுக்கியுள்ளார். இப்படம் ஜாலியாக சிரித்து குடும்பத்தோடு கொண்டாடும் படமாக இருக்கும். தியேட்டரில் பார்த்து ஆதரவு தாருங்கள் நன்றி" என்று தெரிவித்தார்.

நடன இயக்குநர் சந்தோஷ் பேசுகையில், “எல்லோரும் வளர வளர கம்ஃபோர்ட்டாக இருக்க நினைப்பார்கள். ஆனால் நடிகர் ஆதி வளர வளர நிறைய கஷ்டப்பட்டு ஆடுகிறார். இந்த படத்தில் நல்ல ஒரு கதை இருக்கிறது. மக்களுக்கு இந்தப்படம் பிடிக்கும்” என்றார்

ஒளிப்பதிவாளர் அர்ஜூன் ராஜா பேசுகையில், “ஆதி கதை சொன்ன போதே, ஒரு பார்வையாளனாக நான் ரசித்து கேட்டேன். இது நம் கண்முன் தினமும் நடக்கும் கதை. நிறைய விவாதித்து இந்தபடத்தை உருவாக்கினோம். முழுப்படத்தையும் 35 mm, 50 mm லென்ஸில், அதாவது மனிதனின் கண் பார்வையுடய பெர்ஸ்பெக்டிவில் செய்துள்ளோம். உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் என நம்புகிறோம்” என்றார்

நாயகி மாதுரி ஜெயின், “இது எனது முதல் படம். சத்ய ஜோதி தயாரிப்பில் அறிமுகமானது எனக்கு பெருமை. என்னை அழகாக காட்டிய ஒளிப்பதிவாளருக்கு நன்றி. ஆதி கழுத்தில் ஒரு கர்ச்சிஃப் கட்டியிருப்பார் அப்படி கட்டியிருந்தால் அவர் இயக்குநராக இருப்பார்,

மற்ற நேரத்தில் நடிகராக இருப்பார். இந்த படமே ஒரு குடும்பத்துடன் பழகியது போல இருந்தது. எல்லா நடிகர்களுமே நண்பர்களாக மாறிவிட்டனர். இந்தப்படம் அனைவரையும் சிரிக்க வைக்கும் படமாக இருக்கும் பாருங்கள் பிடிக்கும் நன்றி” என கூறினார்.

நடிகர், இயக்குநர் ஆதி, “நிறைய பேருக்கு இது முதல் மேடை, அவர்கள் உணர்ச்சிகரமாக பேசியது படம் பார்க்கும் போது உங்களுக்கு புரியும். அவர்கள் எதிர்பார்ப்புடன் இருப்பதை பார்க்க எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது.

சத்யஜோதி மிகப்பிரமாண்டமாக “அன்பறிவு” படத்தை எடுத்தார்கள். பொது முடக்கத்தால் அது கொஞ்சம் தள்ளிப்போனது. அந்த நேரத்தில் காஞ்சிபுரம் போயிருந்தேன், அங்கு கிடைத்த அனுபவத்தால் தான் இந்தக்கதையை எழுதினேன். இந்தப்படம் நட்சத்திரங்களை வைத்து எடுக்கப்பட்ட படம் அல்ல.

என் தயாரிப்பாளர் ரிஸ்க் வேண்டாம் என்றார். ஆனால் என் நடிகர்கள் மீது நம்பிக்கை வைத்து இப்படத்தை எடுக்க ஆரம்பித்தோம். இந்தப்படத்திற்கு புதுமுகங்கள் தான் சரியாக இருப்பார்கள் என்று தோன்றியது. இந்தப்படம் வெற்றியடையும்போது இந்த நடிகர்கள் பற்றி அனைவரும் தெரிந்து கொள்வார்கள்.

சத்ய ஜோதி தியாகராஜன் அவர்களுக்கு இந்தப்படத்தை தயாரித்ததற்கு நன்றி. இந்தப்படத்தில் இண்டே ரிபல்ஸுடன் இணைந்து தயாரிப்பாளராகவும் மாறியுள்ளேன்

துணிந்தே ரிஸ்க் எடுத்து எடுத்துள்ளோம்.

இரண்டே லென்ஸில் படத்தை ஒளிப்பதிவு செய்த அர்ஜூன்ராஜா அவர்களுக்கு நன்றி. கோல்ட் மெடல் வாங்கிய படத்தொகுப்பாளர் தீபக் எஸ். துவாரகநாத் அட்டகாசமாக செய்துள்ளார். இந்தப் படத்தில் ஆர்ட் மிக முக்கியமானது. அதை அட்டகாசமாக செய்து தந்த வாசு தேவனுக்கு நன்றி.

தமிழ் தெரிந்த ஹீரோயின், அவர் பாண்டிச்சேரி தமிழ்ப்பெண் ஒரு மாதம் எங்களுடன் இணைந்து ரிகர்சல் செய்தார். திரையில் இப்போது அதை பார்க்க நன்றாக இருக்கிறது. இந்தப்படம் தியேட்டரில் அமர்ந்து பார்க்க வேண்டிய படம்.

நான் கேட்டுக்கொண்டதை மதித்து, திரையரங்கில் படத்தை கொண்டுவந்த தயாரிப்பாளருக்கு நன்றி. ஒரு மிடில் கிளாஸ் பையனின் உணர்வுபூர்வமான பயணம் தான் இப்படம். எல்லோருக்கும் பிடிக்கும், குடும்பங்கள் கொண்டாடும் படமாக இப்படம் இருக்கும். உங்கள் ஆதரவை தாருங்கள் நன்றி.

ஹிப்ஹாப் தமிழா இப்படத்திற்கு இசையமைப்பதோடு, கோ சேசாவுடன் இணைந்து பாடல்கள் எழுதியுள்ளார். அர்ஜூன்ராஜா ஒளிப்பதிவு செய்ய, பிரதீப் குமார் ஆக்சன் காட்சிகள் அமைத்துள்ளார். தீபக் எஸ். துவாரகநாத் படத்தொகுப்பு செய்துள்ளார். கலை இயக்கம் கே. வாசு தேவன் செய்துள்ளார்” என குறிப்பிட்டார்.

-அம்பலவாணன்

சித்தார்த் விவகாரத்தில் நடிகை கஸ்தூரி கருத்து!

3 நிமிட வாசிப்பு

சித்தார்த் விவகாரத்தில் நடிகை கஸ்தூரி கருத்து!

‘அழகி-2’: நடிகை நந்திதா தாஸின் ஆசை!

3 நிமிட வாசிப்பு

‘அழகி-2’: நடிகை நந்திதா தாஸின் ஆசை!

100 மில்லியன் பார்வைகளைக் கடந்த ‘டம் டம்’

2 நிமிட வாசிப்பு

100 மில்லியன் பார்வைகளைக் கடந்த ‘டம் டம்’

சனி 25 செப் 2021