மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 25 செப் 2021

அஜித் கனிவானவர்: மரால் யசார்லூ

அஜித் கனிவானவர்: மரால் யசார்லூ

ஈரான் நாட்டைச் சேர்ந்த மரால் யசார்லூ என்கிற பெண்மணி பைக்கில் 64 நாடுகளுக்கு தனியாக பயணம் செய்துள்ளார். திருமணம் ஆன பிறகும், கர்ப்பமாக இருந்த போதும் கூட மரால் உலகத்தை சுற்றி வந்துள்ளார். இதுவரை 11000 கிலோமீட்டர் வரை பைக்கில் பயணம் செய்துள்ளார்

சில தினங்களுக்கு அஜித்குமார் மராலை சந்தித்துக் கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகின. தற்போது மரால் அஜித் குமாரை சந்தித்தது பற்றி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

என்னை பி.எம்.டபிள்யு கம்பெனி தொடர்பு கொண்டு சக பைக் ரைடர் ஒருவரை சந்திக்குமாறு கேட்டுக் கொண்டனர்.

நான் அஜித்குமாரை சந்தித்து உலகபயணம் பற்றிய எனது அனுபவங்களையும் தகவல்களையும் பகிர்ந்து கொள்ள தொடர்பு கொண்டோம்,

நாங்கள் ஒருவருக்கொருவர் தொலைபேசியில் பேசிக்கொண்டோம். இருவரும் சந்திக்க ஏற்ற நேரத்தை நிர்ணயித்தோம். அவர் தென்னிந்தியாவின் பிரபல நடிகர் என்பதை நான் அறிந்துகொண்டேன். அவருக்கு எவ்வளவு புகழ் இருக்கிறது என்பது எங்கள் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாகும் வரை எனக்குத் தெரியாது.

நான் பொதுவாக மக்கள் ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு வேலைகள் இருப்பதாக நம்புவதால் அவர்களின் தொழில் மற்றும் தொழில்களின் அடிப்படையில் நான் அவர்கள் குறித்து தீர்மானிப்பதில்லை.

நம்மை ஒரு மனிதனாக வேறுபடுத்துவது என்ன என்பதையே பார்ப்பேன். தல ரசிகர்களுக்காக, உங்கள் பேவரைட் நடிகரின் உடனான எனது அனுபவம் நன்றாக இருந்தது, அவர் அடக்கமானவர், கனிவானவர், மரியாதைக்குரியவர், மிருதுவானவர், மென்மையான மனிதர் மற்றும் சிறந்த மனிதர் மற்றும் அவரை அறிந்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்.

அவர் ஒரு நடிகர் என்பதால் அல்ல, அவர் ஒரு சிறந்த நபர் மற்றும் கனிவானவர். அவர் சமூக ஊடகங்களில் இல்லை, இது அவருடைய தனியுரிமையை நாம் மதிக்க வேண்டும் என்பதை தெளிவாகக் காட்டுகிறது. அவரது அனுமதியுடன் புகைப்படங்கள் இங்கே பகிரப்பட்டுள்ளன. என்று தெரிவித்துள்ளார்.

-இராமானுஜம்

சிவகார்த்திகேயன் எதிர்பார்க்காத டாக்டர் வசூல்!

5 நிமிட வாசிப்பு

சிவகார்த்திகேயன் எதிர்பார்க்காத டாக்டர் வசூல்!

ஜெய் பீம் கதைக்களம்!

2 நிமிட வாசிப்பு

ஜெய் பீம்  கதைக்களம்!

10 ஆண்டுகளுக்குப் பின் நடிக்கும் வாணி விஸ்வநாத்

2 நிமிட வாசிப்பு

10 ஆண்டுகளுக்குப் பின் நடிக்கும் வாணி விஸ்வநாத்

சனி 25 செப் 2021