மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 24 செப் 2021

ஃப்ளைட்டில் ஃபைல்: அப்டேட் குமாரு

ஃப்ளைட்டில் ஃபைல்: அப்டேட் குமாரு

ஃப்ளைட்ல போகும்போது கூட ஃபைல் பாக்கறதப் பத்தி விவாதம் நடக்குது. ஏம்ப்பா மாசக் கணக்கா வெளையாடிட்டு பரிட்சைக்கு போகும்போது புத்தகத்தைத் தெறக்குற பையன் கூட பரவால்லப்பா. வருசக் கணக்கா நாட்ல இருக்கும்போது பாக்காத ஃபைலையா விமானத்துல போகும்போது பாத்துடப் போறீங்க? அதுவும் பேப்பருக்கு அடியில லைட் வைக்குறதெல்லாம் அடடா....

நீங்க அப்டேட் பாருங்க

மயக்குநன்

'மேட் இன் தமிழ்நாடு' என்ற குரல் உலகம் முழுவதும் ஒலிக்க வேண்டும்!- முதல்வர் ஸ்டாலின்.

இதுதான் உங்களோட 'மனதின் குரலா' தலைவரே..?!

balebalu

ஒம் பணம் பணம் எம் பணம் பணம்

எம் பணம் பணம் ஒம் பணம்

-pmcares

ஜோக்கர்...

வேலை செய்ய வேண்டிய நேரத்தில மயில், வாத்த வச்சு வேடிக்கை காட்டுவார்.

வேடிக்கை பாக்க வேண்டிய நேரத்துல வேலை செய்ற மாதிரி போட்டோ ஷூட் நடத்துவா. அவர் யார்.?!

ரஹீம் கஸ்ஸாலி

நான் நினைச்சி இருந்தால் நாலு வருஷத்துல நிறைய கேஸ் போட்டு இருக்க முடியும்..!- எடப்பாடி

எப்படி... எஸ்.வி.சேகர் மேலே போட்டீங்களே... அது மாதிரியா?

balebalu

உலகெங்கும் உள்ள பலருக்கும் கமலா ஹாரிஸ் உத்வேகமாக திகழ்கிறார் _ பிரதமர்

"நமஸ்தே ஹாரிஸ்" ஆரம்பம் ??

Mannar & company

புரட்டாசி_8

பக்கத்து வீட்டிலேயும் சாம்பார்தான் என ஆறுதலா சாப்பிடுறது புரட்டாசி மாசத்துல மட்டும்தான்!

-புரட்டாசி_பரிதாபங்கள்

PrabuG

PMCARES நிதி இந்திய அரசுக்குச் சொந்தமான நிறுவனமல்ல.

பறக்க ஆரம்பிச்சாச்சு. PMஏ இந்திய அரசுக்கு இனிமே சொந்தம் இல்லையாம். போவியா..

ச ப் பா ணி

குழந்தைகள் வளரும்போது, ஸ்கூல் பீசும் வளர்ந்து கொண்டே இருக்கிறது

காளையன்..

ஒரு வார்த்த பேச ஒரு வருஷம் காத்திருந்தேன்..

ஆமம்மா பின்ன என்ன பொறந்த உடனேவா பேசமுடியும்?..

மயக்குநன்

வணிக வாகன ஓட்டுநர்கள் உறங்குவதைக் கண்டறியும் தொழில்நுட்பம் அவசியம்!- மத்திய அமைச்சர் நிதின் கட்கரி.

அப்படியே... கட்சிகளில் இருக்கிற 'ஸ்லீப்பர் செல்ஸை'க் கண்டறியும் தொழில்நுட்பத்தையும் கண்டுபிடிச்சா நல்லா இருக்கும்..!

கோழியின் கிறுக்கல்!!

கூட்டத்தில் Selfie எடுக்கலாம்னு சொல்லும் போது டக்குனு நம்ம Phone எடுத்து விடுவது,

நாம் பிரகாசமாகவும் தெளிவாகவும் தெரிவதற்கு வழி வகுக்கும்!!

- லாக் ஆஃப்

சிவகார்த்திகேயன் எதிர்பார்க்காத டாக்டர் வசூல்!

5 நிமிட வாசிப்பு

சிவகார்த்திகேயன் எதிர்பார்க்காத டாக்டர் வசூல்!

ஜெய் பீம் கதைக்களம்!

2 நிமிட வாசிப்பு

ஜெய் பீம்  கதைக்களம்!

10 ஆண்டுகளுக்குப் பின் நடிக்கும் வாணி விஸ்வநாத்

2 நிமிட வாசிப்பு

10 ஆண்டுகளுக்குப் பின் நடிக்கும் வாணி விஸ்வநாத்

வெள்ளி 24 செப் 2021