மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 23 செப் 2021

வாட்ஸ் அப் அண்ணாமலை, ட்விட்டர் பிடிஆர்: அப்டேட் குமாரு

வாட்ஸ் அப் அண்ணாமலை, ட்விட்டர் பிடிஆர்: அப்டேட் குமாரு

எப்பப் பாத்தாலும் வாட்ஸ் அப் ட்விட்டர்னு உட்கார்ந்திருக்காதே... அப்புறம் அண்ணாமலை, பிடிஆர் மாதிரி வருத்தப்பட வேண்டியிருக்கும்ம்னு பக்கத்து வீட்டு இளந்தாரி பையன்கிட்ட அவங்க அப்பா சொல்லிக்கிட்டிருந்தார். என்ன சார் இப்படி சொல்லிட்டீங்கனு கேட்டேன். ‘ஆமாப்பா... கட்சிக்காரன் வாட்ஸ் அப்ல வாந்தி எடுத்ததை நம்பி பிரஸ்மீட்ல சொல்லிட்டு அண்ணாமலை தர்மசங்கடத்துக்கு ஆளாயிட்டாரு. பிடிஆர் என்னடானா சர்க்கார் பட விஜய் மாதிரி பொசுக் பொசுக்குனு ட்விட்டர்ல போட்டுட்டு மாட்டிக்கிறாரு. அதான் ஒழுங்கா இருனு பையன்கிட்ட சொல்லிக்கிட்டிருக்கேன்’னாரு. பசங்களை இவ்வளவு பொலிடிக்கலா வளக்குற அப்பாவை நான் பாத்ததே இல்லங்க.

நீங்க அப்டேட் பாருங்க

ச ப் பா ணி

அப்பாவின் ஆண்ட்ராய்ட் போன் தான் இப்போது வாரிசுரிமை போரை உருவாக்குகிறது

மயக்குநன்

நான் 7-ம் வகுப்பு படிக்கும்போதே பென்ஸ் கார் வைத்திருந்தேன்!- முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி.

ஒருவேளை... 'கார்'பட்டா பரம்பரையா இருப்பாரோ..?!

நாகராஜசோழன்.MA.MLA

தியாகராஜன் ஊர் வம்பு இழுப்பது சரியல்ல:-

டி.கே.எஸ்.இளங்கோவன் MP அறிவுரை!

Gst கவுன்சில் கூட்டத்துக்கு நிதியமைச்சர் ஏன் போகலங்கர உண்மை தெரிஞ்சாகணும் சாமி....

ச ப் பா ணி

நின்று கொண்டு நனைந்து இருப்பதைவிட

சென்று கொண்டே நனையலாம்

-மழைக்கால சோகங்கள்...

PrabuG

PMCARES நிதி இந்திய அரசுக்குச் சொந்தமான நிறுவனமல்ல.

பறக்க ஆரம்பிச்சாச்சு. PMஏ இந்திய அரசுக்கு இனிமே சொந்தம் இல்லையாம். போவியா..

சித்ரா தேவி

என்னாங்கயா பைல பார்த்தாலும் கலாய்க்குறீங்க.. மய்ல பார்த்தாலும் கலாய்க்குறீங்க - ஜீ

பரிதி நிலவன்

தடுமாறி விழுந்த போது தான் கவனிக்கிறேன்.. இத்தனை நாள் இருந்த இடம் கோபுரமென்று..

மயக்குநன்

பிரதமர் மோடி அமெரிக்கா பயணம்!- செய்தி.

அப்பாடா... வாங்கி வெச்ச புது விமானத்துக்கு ஒருவழியா வேலை வந்துடுச்சு..!

Ramuvel Kanthasamy

ஃப்ளைட்ல போகும் போது கூட சின்சியரா ஃபைல்ஸ் பார்க்குறீங்களே. அப்படி என்ன முக்கியமான வேலை

ஜி ~ பெட்ரோல் விலை 5 ரூபாயும், சிலிண்டர் விலை 50 ரூபாயும் ஏத்துறதுக்கான ஃபைல்ல கையெழுத்து போட்றது தான்.

மயக்குநன்

இந்த கொரோனா தொற்று காலத்தில், டெங்கு காய்ச்சல் அதிகரிப்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் இருக்கிறது!- ஓபிஎஸ்.

போதாத குறைக்கு 'ரெய்டு ஜூரம்' வேற..?!

கோழியின் கிறுக்கல்!

Mobileல flight mode இருக்கிற மாதிரி, வாழ்க்கைக்கும் தேவைப்படுது!!

மயக்குநன்

7 பேர் விடுதலை விவகாரம் நீா்த்துப் போகாது!- அமைச்சா் எஸ்.ரகுபதி.

ஆமாமா, தேர்தலுக்குத் தேர்தல் கட்சிகளின் வாக்குறுதியில் இடம்பெறுமே..?!

-லாக் ஆஃப்

ரஜினி பாடல் காட்சிகள் அதிகம் விரும்பப்படவில்லையா?

4 நிமிட வாசிப்பு

ரஜினி பாடல் காட்சிகள் அதிகம் விரும்பப்படவில்லையா?

மானநஷ்ட வழக்கு தொடுத்த நடிகை சமந்தா

3 நிமிட வாசிப்பு

மானநஷ்ட வழக்கு தொடுத்த நடிகை சமந்தா

‘எனிமி’க்கு எனிமியான அண்ணாத்த

10 நிமிட வாசிப்பு

‘எனிமி’க்கு எனிமியான அண்ணாத்த

வியாழன் 23 செப் 2021