மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 23 செப் 2021

சந்திரமுகி 2ல் அனுஷ்கா?

சந்திரமுகி 2ல் அனுஷ்கா?

தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருந்தவர் அனுஷ்கா. 'பாகுபலி' படத்திற்கு மொழி கடந்து பிரபல நடிகை ஆனார்.

அதற்குப் பிறகு அவர் நடித்து வெளிவந்த 'பாகமதி' படம் தெலுங்கில் மட்டும் குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்றது.

கடந்த வருடம் அனுஷ்கா நடித்து ஓடிடியில் வெளிவந்த 'சைலன்ஸ்' படம் வெற்றிபெறவில்லை. அதன் பின்னர் எந்த ஒரு புதிய படத்திலும் நடிக்க சம்மதிக்கவில்லை.

திருமணம் செய்துகொள்ளப்போவதால் புதிய படங்களை அனுஷ்கா தவிர்த்து வருவதாக செய்திகள் வெளியானது

இதனிடையே, பி.வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் நடிக்க உள்ள 'சந்திரமுகி 2' படத்தில் கதாநாயகியாக நடிக்க அனுஷ்காவிடம் பேசி வருவதாக செய்திகள் வெளியானது

முன்னணி நடிகர்களுடன் கதாநாயகியாக நடித்த போது நடன இயக்குநராக பணியாற்றியவர் ராகவா லாரன்ஸ். அவருக்கு ஜோடியாக அனுஷ்கா நடிக்க மாட்டார் என்று கூறப்பட்டு வந்தது

ஆனால், இதுவரையிலும் அது குறித்து எந்த ஒரு சம்மதமும் தெரிவிக்காமல் இருக்கிறாராம் அனுஷ்கா. அவரிடம் நாயகன் ராகவா லாரன்ஸே தொடர்பு கொண்டு பேசியுள்ளார் என்கிறார்கள். படத்தில் ராகவா லாரன்ஸ்சுக்கு அவர் ஜோடி இல்லை

படத்தில் முக்கியமான கதாபாத்திரம் அதற்காகவே அவரை நடிக்க வைக்க முயற்சிப்பதாக லாரன்ஸ் தரப்பில் இருந்து தகவல் கூறப்பட்டுள்ளது.

அதனால் சந்திரமுகி-2 ல் அனுஷ்கா நடிப்பதற்கு சம்மதம் தெரிவிப்பார் என்கிற எதிர்பார்ப்பில் இயக்குநர் வாசுவும், நாயகன் ராகவா லாரன்சும் காத்திருப்பதாக கூறப்படுகிறது.

-அம்பலவாணன்

ரஜினி பாடல் காட்சிகள் அதிகம் விரும்பப்படவில்லையா?

4 நிமிட வாசிப்பு

ரஜினி பாடல் காட்சிகள் அதிகம் விரும்பப்படவில்லையா?

மானநஷ்ட வழக்கு தொடுத்த நடிகை சமந்தா

3 நிமிட வாசிப்பு

மானநஷ்ட வழக்கு தொடுத்த நடிகை சமந்தா

‘எனிமி’க்கு எனிமியான அண்ணாத்த

10 நிமிட வாசிப்பு

‘எனிமி’க்கு எனிமியான அண்ணாத்த

வியாழன் 23 செப் 2021