மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 23 செப் 2021

கோடியில் ஒருவன் 2 எடுக்கப்படுமா?

கோடியில் ஒருவன் 2  எடுக்கப்படுமா?

விஜய் ஆண்டனி , ஆத்மிகா நடிப்பில் செந்தூர் ஃபிலிம் இன்டர்நேஷனல் டிடி.ராஜா தயாரித்த படம் கோடியில் ஒருவன். இந்த திரைப்படத்தின் வெற்றிக்கு ஆதரவு அளித்த மக்களுக்கும், பத்திரிகையாளர்களுக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில் நேற்று மாலை ( 22 .09.2021) சென்னையில் பத்திரிகையாளர்களை படக்குழுவினர் சந்தித்தனர்.

நிகழ்வில் விஜய் ஆண்டனி, “ விழாவின் நாயகன் இயக்குநர் ஆனந்தகிருஷ்ணன் தான். எந்தப்படம் ஜெயிச்சாலும் அதற்குக் காரணம் இயக்குநர்தான். இந்தப் படம் மட்டுமல்ல நான் நடித்த அனைத்து படங்களுக்குமே இது பொருந்தும்.

ஆனந்த் என்னிடம் கதை சொல்லும் போதே கண் கலங்கி விட்டார். உண்மையான விஜயராகவன் அவர்தான். இயக்குநர்கள் அட்லி,லோகேஷ் கனகராஜ் போல ஆனந்த கிருஷ்ணனும் விஜய்,அஜித் போன்றவர்களை வைத்துப் படம் இயக்க வேண்டும்.

அதற்குத் தேவையான அனைத்துத் தகுதிகளும் இவருக்கு இருக்கிறது. என் மேல் நம்பிக்கை வைத்து இந்தப் படத்தைத் தயாரித்த தயாரிப்பாளர் ராஜா சாருக்கு நன்றி.

கோடியில் ஒருவன் படத்தின் வெற்றி அதில் பணிபுரிந்த அனைவருக்கும் கிடைத்த வெற்றி. மக்களிடம் இந்தப் படத்தைக் கொண்டு சேர்த்ததற்கு ஊடக நண்பர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றி” என கூறினார்.

தயாரிப்பாளர் டி.டி ராஜா, “ இந்தப் படத்தின் படப்பிடிப்பு துவங்கும் போதே ஊரடங்கு போடப்பட்டது. 6 மாதத்தில் முடிக்க வேண்டிய படம் 20 மாதங்களை கடந்தது. ஓடிடியில் இப்படத்தைக் கொடுப்பதற்கு எங்களுக்கு அதிக விலையில் வாய்ப்புகள் அமைந்தன. ஆனால் இப்படத்தின் மீது எங்களுக்கு அதிக நம்பிக்கை இருந்தது.

தியேட்டரில் தான் ரிலீஸ் ஆக வேண்டும் என்று நினைத்து இப்படத்தை தற்போது வெளியிட்டுள்ளோம். நாங்கள் எதிர்பார்த்ததை விட மிகப்பெரிய வரவேற்பை மக்கள் கொடுத்து இருக்கிறார்கள். அதற்குக் காரணம் ஊடகத் துறையும், பத்திரிகை துறையும் தான். உங்கள் அனைவருக்கும் நன்றி” என்றார்.

படத்தின் வர்த்தக, விளம்பர வியூக அமைப்பாளர், தனஞ்ஜெயன் , “ இரண்டாவது கொரோனா ஊரடங்கிற்குப் பிறகு மக்களை தியேட்டருக்கு கொண்டுவந்த முதல்படம் கோடியில் ஒருவன் தான். இரண்டாவது கொரோனா ஊரடங்கிற்குப் பிறகு மக்கள் தியேட்டர்களுக்கு வருவார்களா? இல்லையா? என்ற கேள்விகளைத் தவிடுபொடியாக்கி கோடியில் ஒருவன் ஜெயித்து இருக்கிறது.

இந்தபடத்தை எந்தவித பிரச்சனையுமின்றி தயாரித்துக் கொடுத்த தயாரிப்பாளர் ராஜா சாருக்கும் இயக்குநருக்கும் நன்றி. இயக்குநர் ஆனந்த கிருஷ்ணன் கண்டிப்பாக ஒரு மிகப்பெரிய இடத்தை அடைவார்” என்று தெரிவித்தார்.

.

நடிகர் கதிர், “தமிழ் சினிமாவில் திமிருபிடித்தவன் படத்தின் மூலம் எனக்கு அறிமுகம் கொடுத்தவர் விஜய் ஆண்டனி சார் தான். தற்போது கோடியில் ஒருவன் படம் மூலம் ஒரு அங்கீகாரம் கொடுத்தவரும் விஜய் ஆண்டனி சார் தான். பிச்சைக்காரன் 2 படத்திலும் நான் நடிக்கிறேன்” என்று குறிப்பிட்டார்.

இயக்குநர் ஆனந்தகிருஷ்ணன், “என் அம்மாவிடம் நான் சொல்லியிருந்தேன் பத்திரிகையாளர்களை நம்பித்தான் நான் படம் எடுக்கிறேன் என்று.எனது கருத்துகளை மக்களிடம் அவர்கள் கொண்டுபோய்ச் சேர்ப்பார்கள் என்று நம்பினேன் .நான் நினைத்ததை விட சிறப்பாகவே தற்போது நடந்திருக்கிறது.

மெட்ரோ படத்திற்கு எனக்குப் பல பாராட்டுகள்கிடைத்தன. ரசிகர்களுக்கு பிடித்த கமர்சியல் படம் எடுக்க வேண்டும் என்று எனக்கு ஆசை இருந்தது.

இந்தப்படம் மிகப்பெரிய வெற்றி அடைந்தது என தயாரிப்பாளர் சொல்லும்பொழுது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.இந்தப் படத்திற்காக எனக்கு அதிக ஒத்துழைப்பு அளித்த விஜய் ஆண்டனி சாருக்கு நன்றி.

விஜய் ஆண்டனி தான் உண்மையான கோடியில் ஒருவன். கோடியில் ஒருவன் ஜெயிப்பான் என முதலில் நம்பியது விஜய் ஆண்டனி சார் தான். கண்டிப்பாக கோடியில் ஒருவன் 2 படம் இருக்கிறது” என்று கூறினார்.

கமல் போக்ரா , “இந்தப் படத்தை மக்களிடம் கொண்டு போய்ச் சேர்த்த, மிகப்பெரிய வெற்றியடையச் செய்த ஊடக நண்பர்களுக்கு கோடான கோடி நன்றி. நான் மார்வாடி என்றாலும் சென்னையிலேயே பிறந்துவளர்ந்தவன், வாரந்தோறும் இரண்டு அல்லது மூன்று படங்கள் பார்த்துவிடுவேன்.அந்த ஆர்வத்தில் இந்தத் தொழிலுக்கு வந்துள்ளேன்.கண்டிப்பாகத் தமிழ் சினிமாவிற்காக பல நல்ல படங்களைக் கொடுப்போம்” என்றார்.

ரஜினி பாடல் காட்சிகள் அதிகம் விரும்பப்படவில்லையா?

4 நிமிட வாசிப்பு

ரஜினி பாடல் காட்சிகள் அதிகம் விரும்பப்படவில்லையா?

மானநஷ்ட வழக்கு தொடுத்த நடிகை சமந்தா

3 நிமிட வாசிப்பு

மானநஷ்ட வழக்கு தொடுத்த நடிகை சமந்தா

‘எனிமி’க்கு எனிமியான அண்ணாத்த

10 நிமிட வாசிப்பு

‘எனிமி’க்கு எனிமியான அண்ணாத்த

வியாழன் 23 செப் 2021