மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 23 செப் 2021

பாராட்டிய சிரஞ்சீவி: சாய் பல்லவி நெகிழ்ச்சி!

பாராட்டிய சிரஞ்சீவி: சாய் பல்லவி நெகிழ்ச்சி!

நாகசைதன்யாவுடன் இணைந்து லவ் ஸ்டோரி என்ற தெலுங்கு படத்தில் நடித்துள்ளார் சாய் பல்லவி. இப்படம் நாளை(24.09.2021) வெள்ளிக்கிழமை உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.

இந்தநிலையில் படம் குறித்து பத்திரிகையாளர்களிடம் பேசிய சாய்பல்லவி, இதற்கு முன்பு சேகர் கம்முலா இயக்கத்தில் நடித்த பிடா படத்தில் இருந்து இப்படம் முற்றிலும் மாறுபட்டது.

இது காதல் கதை என்றாலும் மனித உணர்வுகள் சம்பந்தமான விசயங்களும் சொல்லப்பட்டிருக்கிறது. இதுவரை நான் நடித்த படங்களில் இருந்து இப்படத்தின் கதை முற்றிலும் மாறுபட்டதாகும்.

அதோடு இந்த படத்தின் பாடல் காட்சிகளில் எனக்கு நடனமாட நிறைய வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. அதனால் இந்த படத்தில் எனது நடிப்பைப் போலவே நடனத்தையும் தெலுங்கு ரசிகர்கள் கொண்டாடுவார்கள் என்று கூறியுள்ளார்.

மேலும் எனது நடனத்தை சிரஞ்சீவி பாராட்டியுள்ளார். அது எனக்கு மிகப்பெரிய ஊக்கத்தை கொடுத்துள்ளது. நான்ஆசீர்வதிக்கப்பட்டவளாக உணர்கிறேன்.

அவர் என்னைப்பற்றி பேசிய விதம் அவரது மகத்துவத்தை காண்பிக்கிறது. அவருடன் நடிக்க வேண்டும் என்ற ஆவலுடன் காத்திருக்கிறேன்.

அடுத்து தமிழ், தெலுங்கு, மலையாளத்தில் தலா ஒரு படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளேன் இந்தி வலைதொடர் ஒன்றில் நடிக்கவும் ஒப்பந்தமாகியுள்ளேன்” என்றும் தெரிவித்துள்ளார்.

-இராமானுஜம்

பிக்பாஸ் அக்‌ஷரா ரெட்டியின் மறுமுகம்!

6 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் அக்‌ஷரா ரெட்டியின் மறுமுகம்!

நடிகர்களை பின்னுக்கு தள்ளிய ராஷ்மிகா மந்தனா

3 நிமிட வாசிப்பு

நடிகர்களை பின்னுக்கு தள்ளிய ராஷ்மிகா மந்தனா

வாகா எல்லையில் நடிகர் அஜித்

2 நிமிட வாசிப்பு

வாகா எல்லையில் நடிகர் அஜித்

வியாழன் 23 செப் 2021