மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 23 செப் 2021

பொங்கலுக்கு வெளியாகுமா பீஸ்ட்?

பொங்கலுக்கு வெளியாகுமா பீஸ்ட்?

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய் நடித்து வரும் 'பீஸ்ட்' திரைப்படம், 2022-ம் ஆண்டு பொங்கல் அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. தீபாவளி அன்று அஜித்குமார் நடித்துள்ள வலிமை வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில் நேற்று (செப்டம்பர் 22) அப்படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர், ’2022 பொங்கலுக்கு மகிழ்ச்சியுடன் வருகிறோம்’ என்று அறிவித்து வலிமை பட வெளியீட்டுத் தேதி பற்றிய யூகங்களுக்கு, முற்றுப்புள்ளி வைத்தார்

2022-ம் ஆண்டு பொங்கலுக்கு விஜய் நடிப்பில் உருவாகி வரும் 'பீஸ்ட்' வெளியாகும் என ஏற்கனவே கூறப்பட்டு வந்த நிலையில் இதன் மூலம் விஜய்யின் 'பீஸ்ட்' மற்றும் அஜித்தின் 'வலிமை' என இரண்டிற்கும் நேரடிப் போட்டி என்று செய்திகள் நேற்றைய தினம் ஊடகங்களில் பரபரப்பான செய்தியானது

இதனை வைத்து இரண்டு தரப்பு ரசிகர்களும் ஒருவரை ஒருவர் திட்டி ட்வீட்களை வெளியிட்டுச் சண்டையிட்டு வருகிறார்கள்.

பீஸ்ட் படத்தின் வெளியீடு தொடர்பாக விசாரித்தபோது,

“தற்போது டெல்லியில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. அதனைத் தொடர்ந்து ரஷ்யா,மற்றும் சென்னையிலும் படப்பிடிப்பு நடைபெறவுள்ளது. ஒட்டுமொத்தப் படப்பிடிப்பும் நவம்பருக்குள் முடிக்கப்பட்டால் சாதனைதான். அதன் பின் போஸ்ட் புரொடக்க்ஷன் முடியக் கால அவகாசம் தேவைப்படும். அவசர அவசரமாக எந்த வேலைகளையும் செய்ய முடியாது.

அப்படியிருக்கும்போது, பொங்கல் வெளியீடு என்பது சாத்தியமில்லை. தீபாவளியைக் காட்டிலும் பொங்கல் பண்டிகைக்கு தியேட்டர்களில் வசூல் குறைவாகவே இருக்கும். இன்றைய குழலில் தயாரிப்பாளர் விரும்பினாலும் அஜித்குமார் படத்துடன் நேரடி மோதலுக்கு விஜய் தயாராக இல்லை” என்கிறது விஜய் தரப்பு தகவல்கள்.

அதனால் கோடை விடுமுறை கொண்டாட்டமாகவே பீஸ்ட் படத்தை வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளது.

தீபாவளிக்கு ரஜினிகாந்த் நடித்துள்ள அண்ணாத்த, அதனைத் தொடர்ந்து கிறிஸ்துமஸ் விடுமுறைக்கு சூர்யா நடிப்பில் தயாராகி வரும் 'எதற்கும் துணிந்தவன்' படங்களைத் திரையிட சன்பிக்சர்ஸ் தரப்பு திட்டமிட்டுள்ளது.

-இராமானுஜம்

பிக்பாஸ் அக்‌ஷரா ரெட்டியின் மறுமுகம்!

6 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் அக்‌ஷரா ரெட்டியின் மறுமுகம்!

நடிகர்களை பின்னுக்கு தள்ளிய ராஷ்மிகா மந்தனா

3 நிமிட வாசிப்பு

நடிகர்களை பின்னுக்கு தள்ளிய ராஷ்மிகா மந்தனா

வாகா எல்லையில் நடிகர் அஜித்

2 நிமிட வாசிப்பு

வாகா எல்லையில் நடிகர் அஜித்

வியாழன் 23 செப் 2021