மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 22 செப் 2021

நேருக்கு நேர் மோதும் விஜய் அஜித்

நேருக்கு நேர் மோதும் விஜய் அஜித்

போனி கபூர் தயாரிப்பில், வினோத் இயக்கத்தில், யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பில், அஜித், ஹுமா குரேஷி, கார்த்திகேயா மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'வலிமை'.

இப்படத்தின் முதல் சிங்கிளான 'நாங்க வேற மாரி' பாடல் கடந்த மாதம் யூடியூபில் வெளியாகி 26 மில்லியன் பார்வைகளைக் கடந்தது. இப்படத்தின் அடுத்த சிங்கிள் வெளியாகும், இசை வெளியீடு பற்றிய அறிவிப்பு எப்போது வெளியாகும் என ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

ஆயுத பூஜைக்கு வருமா, தீபாவளிக்கு வருமா என பட வெளியீடு பற்றி விவாதம் நடந்து வந்தது. நாளை படத்தின் ரிலீஸ் தேதி வெளியாகும் என கூறப்பட்ட நிலையில் அனைத்து கேள்விகளுக்கும் விடையளிக்கும் விதமாக 'வலிமை' பற்றிய அதிகாரபூர்வ தகவலை தயாரிப்பாளர் போனி கபூர் இன்று (செப்டம்பர் 22) அறிவித்தார்.

“வலிமை படம் வருகிற 2022 பொங்கலுக்கு வெளியாகிறது என மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறேன்'' என ட்விட்டரில் போனி கபூர் பதிவிட்டுள்ளார்.

இதன்மூலம் தீபாவளி போட்டியில் ஏற்கனவே உள்ள ரஜினியின் அண்ணாத்த, சிம்புவின் மாநாடு படங்கள் உடனான மோதலை தவிர்த்துள்ளனர்.

அதே சமயம் 2022 பொங்கல் போட்டியில் விஜய்யின் பீஸ்ட் படம் உள்ளது. இதன்மூலம் விஜய், அஜித்குமார் நடித்த படங்கள் மீண்டும் ஒரு முறை நேருக்கு நேர் மோத உள்ளது.

தமிழ் சினிமாவில் படவெளியீடு, விநியோகம் இவற்றை தீர்மானிப்பவர்களே ரஜினிகாந்த் நடித்துள்ள அண்ணாத்த, வலிமை படங்களின் ஏரியா உரிமைகளை வாங்க கூடிய சூழல் உள்ளது.

அதனால் வலிமை படத்தை பொங்கல் அன்று வெளியிடுவது வணிகரீதியாக வெற்றிபெற வாய்ப்பை ஏற்படுத்தும். மேலும் விஜய் படம் வெளியாகும் அன்று அஜித்குமார் நடித்துள்ள படம் வெளியானால் இரு தரப்பு ரசிகர்களும் தங்கள் விருப்பத்துக்குரிய நடிகரின் படத்தை வெற்றிபெற வைக்க கடுமையாக களப்பணியாற்றுவார்கள். இரண்டு படங்களும் வசூல் ரீதியாக தப்பிக்ககூடும் என்பதாலேயே வலிமை பொங்கலுக்கு வெளியிடப்படுகிறது என்கின்றனர் கோடம்பாக்க வட்டாரத்தில்.

- அம்பலவாணன்

‘ஜென்டில்மேன் 2’ இசையமைப்பாளர் அறிவிப்பு!

3 நிமிட வாசிப்பு

‘ஜென்டில்மேன் 2’ இசையமைப்பாளர் அறிவிப்பு!

வசூலில் வாகை சூடிய ‘வீரமே வாகை சூடும்’!

3 நிமிட வாசிப்பு

வசூலில் வாகை சூடிய ‘வீரமே வாகை சூடும்’!

பரத்தை அடித்தேனா?- சர்ச்சைகளுக்கு வெங்கடேஷ்பட் விளக்கம்!

3 நிமிட வாசிப்பு

பரத்தை அடித்தேனா?- சர்ச்சைகளுக்கு வெங்கடேஷ்பட் விளக்கம்!

புதன் 22 செப் 2021