மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 22 செப் 2021

பேய் மாமாவுக்கு அவ்வளவுதான் கிரியேட்டிவிட்டியா?

பேய் மாமாவுக்கு அவ்வளவுதான் கிரியேட்டிவிட்டியா?

யோகி பாபுவின் நடிப்பில் உருவாகியுள்ள ‘பேய் மாமா’ படத்தின் போஸ்டர் நேற்று முன்தினம் வெளியானது. அதைப் பார்த்தவுடன் சமூக வலைதளங்களில் அந்தப் படம் பற்றி கிண்டலும், கேலியுமான மீம்ஸ்கள் பரவலாக வலம் வந்து கொண்டிருக்கின்றன.

பாக்யா சினிமாஸ் பட நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘பேய் மாமா’. இயக்குநர் ஷக்தி சிதம்பரம் இயக்கியுள்ள இந்தப் படத்தின் நாயகனாக யோகி பாபு நடித்துள்ளார். மேலும் இந்தப் படத்தில் ரேகா, ரேஷ்மா, ரமேஷ் கண்ணா, இமான் அண்ணாச்சி, வையாபுரி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

இந்தப் படத்திற்குத் தணிக்கையில் ‘யு/ஏ’ சான்றிதழ் கிடைத்துள்ளது. இந்தப் படம் செப்டம்பர் 24-ம் தேதி வெளியாகவுள்ளது. இந்த வெளியீட்டுத் தேதி அறிவிப்பை படத்தின் போஸ்டருடன் வெளியிட்டனர். இந்தப் போஸ்டர்தான் தற்போது இணையத்தில் கடுமையான கிண்டலுக்கும் ஆளாகியுள்ளது.

ஏனென்றால், இந்தியில் விக்கி கெளசல் நடிப்பில் வெளியான படம் ‘பூட்’ படத்துக்காக உருவாக்கப்பட்ட போஸ்டரை அப்படியே மாற்றி, ‘பேய் மாமா’ போஸ்டரை உருவாக்கியுள்ளனர்.

குறிப்பாகப் புதிதாக யோகி பாபு படத்தைக்கூட வைக்காமல், இந்தி போஸ்டரில் உள்ள நாயகனின் தலைக்கு பதிலாக யோகி பாபுவின் தலையை வைத்து உருவாக்கியுள்ளனர்.இந்த அளவுக்கா கிரியேட்டிவிட்டி இல்லாமல் அந்தப் படக் குழுவினர் இருக்கிறார்கள் என்று பலரும் கிண்டல் செய்து வருகிறார்கள்.

-அம்பலவாணன்

பிக்பாஸ் அக்‌ஷரா ரெட்டியின் மறுமுகம்!

6 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் அக்‌ஷரா ரெட்டியின் மறுமுகம்!

நடிகர்களை பின்னுக்கு தள்ளிய ராஷ்மிகா மந்தனா

3 நிமிட வாசிப்பு

நடிகர்களை பின்னுக்கு தள்ளிய ராஷ்மிகா மந்தனா

வாகா எல்லையில் நடிகர் அஜித்

2 நிமிட வாசிப்பு

வாகா எல்லையில் நடிகர் அஜித்

புதன் 22 செப் 2021