மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 22 செப் 2021

பேரு வச்சாலும் பாடல்... ரகசியத்தைப் பகிர்ந்த இளையராஜா

பேரு வச்சாலும் பாடல்... ரகசியத்தைப் பகிர்ந்த இளையராஜா

இயக்குநர் சிங்கீதம் சீனிவாசராவ் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசனின் நடிப்பில் 31 வருடங்களுக்கு முன்பு வெளிவந்த திரைப்படம் ‘மைக்கேல் மதன காமராஜன்’. இந்தப் படத்தில் நான்கு வேடத்தில் கமல்ஹாசன் நடித்திருப்பார்.

இளையராஜாவின் இசையில் வெளியான பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்டானது. குறிப்பாக 'பேரு வச்சாலும் வைக்காம போனாலும்…' என்ற பாடல் மிகவும் பிரபலம்.

இந்தப் பாடலை சந்தானம் நடித்த ‘டிக்கிலோனா’ படத்தில் மீண்டும் பயன்படுத்தி இருக்கிறார் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா. இந்தப் பாடலில் சந்தானத்துடன் நடனம் ஆடிய நடிகை அனகா ரசிகர்களிடம் மிகவும் பிரபலமாகிவிட்டார். அந்தப் பாடலில் அவர் நடனமாடிய காட்சிகள் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

இந்த நிலையில், இந்தப் பாடல் எப்படி உருவானது என்பதற்கான சுவாரஸ்யமான விளக்கத்தை ஒரு வீடியோ பேட்டியில் கூறியுள்ளார் இளையராஜா.

இந்தப் பாடலுக்கான மெட்டை கவிஞர் வாலியிடம் கூறியபோது, 'இது என்னயா மெட்டு..? இதற்கு எப்படி பாடல் எழுதுவது..?' எனக் கேட்டார். அதற்கு 'துப்பார்க்கு துப்பாய துப்பாக்கி துப்பார்க்கு துப்பாய தூஊம் மழை’ என்ற குறள் மூலம் வள்ளுவர் ஏற்கனவே இந்த மெட்டுக்குரிய பாடலை எழுதிவிட்டார் எனக் கூறினேன். அதைப் பாடியும் காட்டினேன். உடனே வாலி அண்ணன் அதற்கேற்றாற்போல் எழுதியதுதான் இந்த 'பேர் வைச்சாலும் வைக்காமல் போனாலும்' என்ற பாடல் என்று விளக்கினார் இளையராஜா.

இளையராஜா இந்தப் பாடல் குறித்து பேசிய வீடியோவும் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

-இராமானுஜம்

சிவகார்த்திகேயன் எதிர்பார்க்காத டாக்டர் வசூல்!

5 நிமிட வாசிப்பு

சிவகார்த்திகேயன் எதிர்பார்க்காத டாக்டர் வசூல்!

ஜெய் பீம் கதைக்களம்!

2 நிமிட வாசிப்பு

ஜெய் பீம்  கதைக்களம்!

10 ஆண்டுகளுக்குப் பின் நடிக்கும் வாணி விஸ்வநாத்

2 நிமிட வாசிப்பு

10 ஆண்டுகளுக்குப் பின் நடிக்கும் வாணி விஸ்வநாத்

புதன் 22 செப் 2021