மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 22 செப் 2021

சிலம்பரசன் கடின உழைப்பு: பாராட்டும் தயாரிப்பு நிறுவனம்!

சிலம்பரசன் கடின உழைப்பு: பாராட்டும் தயாரிப்பு நிறுவனம்!

சிலம்பரசனின் கடின உழைப்புக்கு 'வெந்து தணிந்தது காடு' படக்குழு புகழாரம் சூட்டியுள்ளது.

கெளதம் மேனன் இயக்கத்தில் சிலம்பரசன் நடிப்பில் உருவாகி வரும் படம் 'வெந்து தணிந்தது காடு'. வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படத்தில் ராதிகா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் கதையை ஜெயமோகன் எழுதியுள்ளார்.

படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு திருச்செந்தூரில் தொடங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து சென்னையில் நடந்த இரண்டாம்கட்டப் படப்பிடிப்பும் முடிந்தது என்று 'வெந்து தணிந்தது காடு' படக்குழு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் தங்ளுடைய ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

"வெந்து தணிந்தது காடு இரண்டாம்கட்டப் படப்பிடிப்பு முடிந்து விரைவில் மும்பையில் மூன்றாம்கட்டப் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. சண்டைக் காட்சிகளில் சிலம்பரசன் மிகத் தீவிரமான, கடின உழைப்பைக் கொடுத்துள்ளார். இது பார்வையாளர்களுக்கு விருந்தாக அமையும்." - இவ்வாறு வேல்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்தப் படத்தின் இசையமைப்பாளராக ஏ.ஆர்.ரஹ்மான், பாடலாசிரியராக தாமரை ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள்.

-இராமானுஜம்

ரெட்டை ஜடையில் அமலா பால்: வைரலாகும் புகைப்படம்!

3 நிமிட வாசிப்பு

ரெட்டை ஜடையில் அமலா பால்: வைரலாகும் புகைப்படம்!

ஆஸ்கார் தகுதிப்பட்டியலில் ஜெய்பீம்!

3 நிமிட வாசிப்பு

ஆஸ்கார் தகுதிப்பட்டியலில் ஜெய்பீம்!

சுசிகணேசன் வழக்கு: சின்மயி - லீனா மணிமேகலைக்கு எதிராக தீர்ப்பு! ...

4 நிமிட வாசிப்பு

சுசிகணேசன் வழக்கு: சின்மயி - லீனா மணிமேகலைக்கு எதிராக தீர்ப்பு!

புதன் 22 செப் 2021