மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 21 செப் 2021

சிம்புதேவனைப் பாராட்டிய ஷங்கர்

சிம்புதேவனைப் பாராட்டிய ஷங்கர்

'கசட தபற' படத்தைப் பார்த்துவிட்டு சிம்புதேவனைப் பாராட்டியுள்ளார் இயக்குநர் ஷங்கர்.

வெங்கட்பிரபு தயாரிப்பில் சிம்புதேவன் இயக்கத்தில் ஓடிடி தளத்தில் வெளியான படம் 'கசட தபற' இந்தப் படத்தில் சந்தீப் கிஷன், சாந்தனு, ரெஜினா, பிரேம்ஜி, வெங்கட் பிரபு, விஜயலட்சுமி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்துக்குப் பல்வேறு திரையுலக பிரபலங்களும் பாராட்டு தெரிவித்திருந்தனர்.

தற்போது 'கசட தபற' படத்தைப் பார்த்துவிட்டு இயக்குநர் ஷங்கர் தனது ட்விட்டர் பதிவில், " 'கசட தபற' பார்த்தேன். விறுவிறுப்பான புது அனுபவம். இயக்குநர் சிம்புதேவனின் அற்புதமான திறமையையும், பல்வேறு பரிணாமங்களையும் பார்த்தது நன்றாக இருந்தது" என்று தெரிவித்துள்ளார்.

ஷங்கரின் பாராட்டுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் சிம்புதேவன், " 'கசட தபற' படத்திற்கு தங்களின் மனம் நிறைந்த வாழ்த்து எனக்கும் எனது குழுவுக்கும் மிகுந்த மகிழ்ச்சியை அளித்துள்ளது.

தங்களின் வார்த்தைகள் என்னையும் எனது குழுவினரையும் அடுத்த முறையும் சிறப்பான முறையில் பணிபுரிய ஊக்குவிக்கும். எங்கள் குழுவின் சார்பில் மனமார்ந்த நன்றி" என்று தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

இயக்குநர் ஷங்கரிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்தவர் சிம்புதேவன். அவருடைய முதல் படமான 'இம்சை அரசன் 23-ம் புலிகேசி' படத்தைத் தயாரித்தவர் ஷங்கர் என்பது குறிப்பிடத்தக்கது.

-இராமானுஜம்

சித்தார்த் விவகாரத்தில் நடிகை கஸ்தூரி கருத்து!

3 நிமிட வாசிப்பு

சித்தார்த் விவகாரத்தில் நடிகை கஸ்தூரி கருத்து!

‘அழகி-2’: நடிகை நந்திதா தாஸின் ஆசை!

3 நிமிட வாசிப்பு

‘அழகி-2’: நடிகை நந்திதா தாஸின் ஆசை!

100 மில்லியன் பார்வைகளைக் கடந்த ‘டம் டம்’

2 நிமிட வாசிப்பு

100 மில்லியன் பார்வைகளைக் கடந்த ‘டம் டம்’

செவ்வாய் 21 செப் 2021