hபிக்பாஸ் ஒளிபரப்பு தேதிகள் அறிவிப்பு!

entertainment

சினிமா மட்டுமே மக்களுக்கான பிரதான பொழுதுபோக்கு என்று இருந்த நிலையில் தனியார் தொலைக்காட்சி வருகை, அதில் தமிழ் படங்கள், மெகா தொலைக்காட்சி தொடர்கள் ஆகியவை ஒளிபரப்பான போது திரையரங்குகளில் பார்வையாளர்கள் எண்ணிக்கை குறையத் தொடங்கியது

சினிமாவில் மட்டுமே பார்த்து ரசிக்கக்கூடிய நடிகர்கள் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளர்களாக மாறியபோது சினிமா, சினிமா நடிகர்கள் மீது இருந்த பிம்பம் சிதறத் தொடங்கியது. இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியைக் கடந்த நான்கு வருடங்களாகத் தொகுத்து வழங்கிவரும் கமல்ஹாசன் ஐந்தாவது சீசனையும் தொகுத்து வழங்கவுள்ளார்.

பிக் பாஸ் இந்தி நிகழ்ச்சியின் 15வது சீசன் அக்டோபர் மாதம் 2ம் தேதி துவங்கவிருக்கிறது. இந்த சீசனையும் பாலிவுட் நடிகர் சல்மான் கான் தான் தொகுத்து வழங்கவிருக்கிறார். கடந்த 11 சீசன்களாக சல்மான் கான் தான் தொகுத்து வழங்கி வருகிறார். அவர் அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் விதம் ரசிகர்களுக்கு பிடித்திருக்கிறது. ஒவ்வொரு சீசனுக்கும் தன் சம்பளத்தை உயர்த்திக் கொண்டே இருக்கிறார் சல்மான்கான் என்கிறார்கள்

பிக் பாஸ் 15 நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க சல்மான் கானுக்கு ரூ. 350 கோடி சம்பளம் என்று தகவல் வெளியாகியிருந்தது. பதினான்கு வாரங்களுக்கு ரூ. 350 கோடியா என்று வியக்கக் கூடியவர்களுக்கு எப்படி இவ்வளவு சம்பளம் என்பதையும் விளக்கியிருக்கிறார்கள். பிக் பாஸ் நிகழ்ச்சியின் 4வது சீசன் முதல் 6வது சீசன் வரை ஒரு எபிசோடுக்கு ரூ. 2.5 கோடி வாங்கியிருக்கிறார் சல்மான் கான். 7வது சீசனில் தன் சம்பளத்தை இரண்டு மடங்காக உயர்த்தி ரூ. 5 கோடி வாங்கினார். பிக் பாஸ் 13 நிகழ்ச்சிக்கு வாரத்திற்கு ரூ. 13 கோடி வாங்கினார். தற்போது 15வது சீசனில் வாரத்திற்கு ரூ. 25 கோடி வாங்கப் போகிறார்.

பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் 5வது சீசனை தொகுத்து வழங்க கமல்ஹாசனுக்கு ரூ. 60 கோடி சம்பளம் பேசப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. அதற்கே ரூ. 60 கோடியா என்று செய்திகள் வெளியாகி வந்து கொண்டிருக்கும் சூழ்நிலையில் அக்டோபர் 3 முதல் பிக்பாஸ் தமிழ் பகுதி ஒளிபரப்பாக இருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை தமிழில் நான்கு சீசன்கள் முடிந்துள்ளன. 5-வது சீசனையும் கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்க உள்ளார். ‘பிக்பாஸ் 5’ நிகழ்ச்சிக்கான புரமோ வீடியோக்கள் அவ்வப்போது வெளியாகி வருகிறது. கமல் ‘இந்த வீட்டில் கிசுகிசு பேசுறது ரொம்ப கஷ்டம் போல…’ என்று பேசும் வீடியோ ரசிகர்களை வெகுவாக கவர்ந்து சமூக வலைத்தளத்தில் சூட்டைக் கிளப்பியது

இந்த நிலையில் தற்போது வெளியாகியிருக்கும் புதிய முன்னோட்டத்தில் நடிகர் கமல்ஹாசன் ஒரு கண்ணாடி முன்பு போய் நின்று வீட்டிற்கு வருபவர்களை வரவேற்பது போல் ஒத்திகை செய்து பார்க்கிறார். “அடடே.. வாங்க வாங்க..” என்று பேசி பார்க்கிறார். இதையே பல விதமாக பேசி பார்க்கிறார்.

இறுதியாக அவரே, “ஏன் இப்படி எல்லாம் என்று கேட்கிறீர்களா? நான் நானாக இருப்பதற்கு முயற்சி செய்கிறேன். அதுவும் குறிப்பாக இந்த வீட்டில் நான் நானாக இருப்பது மிக கடினம்” என்று சொல்லிக் கொண்டே இருக்கும்போது யாரோ வீட்டுக்குள் வர, “அடடே.. வாங்க.. வாங்க” என்று சொல்லி முடிக்கிறார். இப்படியாக இந்த முன்னோட்டம் நிறைவடைகிறது.

தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியின் 5வது சீசன் வரும் அக்டோபர் 3ந் தேதி முதல் மாலை 6 மணிக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

**-இராமானுஜம்**

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *