மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 21 செப் 2021

பாலா சூர்யாவுடன் இணையும் இயக்குநர் விஜி

பாலா சூர்யாவுடன் இணையும் இயக்குநர் விஜி

வெள்ளித்திரை, அள்ளித்தந்த வானம் படங்களை இயக்கியதுடன் மொழி, 36 வயதினிலே படங்களுக்கு வசனம் எழுதியதன் மூலம் பிரபலமானவர் இயக்குநர் விஜி. வசனங்கள் மூலம் ரசிகனை இருக்கையில் இருந்து எழுந்து போகவிடாத வித்தைகாரன் விஜி என்கிறார்கள் கோடம்பாக்கத்தின் இயக்குநர்கள். இவர் பாலா,சூர்யா இருவருடனும் இணைந்து பணியாற்ற உள்ளார்.

இயக்குநர் பாலாவின் அடுத்த படத்தின் நாயகன் அதர்வாவா? சூர்யாவா? என பட்டிமன்றம் நடக்காத குறையாக மாற்றி மாற்றிச் செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன. அதற்கான உறுதியான விடை, பாலா இயக்கத்தில் நாயகனாக நடிக்கவிருப்பவர் சூர்யா.

சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தில் பாலா இயக்கத்தில் சூர்யா நடிக்கவிருக்கிறார். இப்படத்துக்கு பாலசுப்பிரமணியம் ஒளிப்பதிவு செய்யவிருக்கிறார்.

இப்படத்தின் திரைக்கதை உருவாக்கம் மற்றும் வசனங்களை எழுத பாலாவுடன் இணைந்திருக்கிறார் இயக்குநர் விஜி. அள்ளித்தந்த வானம், வெள்ளித்திரை ஆகிய படங்களை இயக்கியிருக்கும் விஜி, மொழி, 36 வயதினிலே ஆகிய படங்களுக்கு வசனம் எழுதிப் பெரும்புகழ் பெற்றவர்.

ஏற்கெனவே பாலா தயாரித்த படங்களில் விஜி பணிபுரிந்திருந்தாலும் பாலா இயக்கும் படத்துக்கு அதிகாரபூர்வமாக விஜி வசனம் எழுதுவது இதுவே முதல்முறை.

இதனால் இந்தப்படம் பெரிதும் பேசப்படுகிற வெற்றிப்படமாக அமையும் என்று படக்குழுவினர் நம்பிக்கையாகச் சொல்கின்றனர்.

-இராமானுஜம்

ரஜினி பாடல் காட்சிகள் அதிகம் விரும்பப்படவில்லையா?

4 நிமிட வாசிப்பு

ரஜினி பாடல் காட்சிகள் அதிகம் விரும்பப்படவில்லையா?

மானநஷ்ட வழக்கு தொடுத்த நடிகை சமந்தா

3 நிமிட வாசிப்பு

மானநஷ்ட வழக்கு தொடுத்த நடிகை சமந்தா

‘எனிமி’க்கு எனிமியான அண்ணாத்த

10 நிமிட வாசிப்பு

‘எனிமி’க்கு எனிமியான அண்ணாத்த

செவ்வாய் 21 செப் 2021