மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 19 செப் 2021

நீட் தற்கொலை: சூர்யா அட்வைஸ்!

நீட் தற்கொலை: சூர்யா அட்வைஸ்!

தமிழகத்துக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற வேண்டும் என்பதே ஒட்டுமொத்த தமிழக மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. நீட் தேர்வு அச்சம் காரணமாகத் தொடர்ச்சியாக மாணவ, மாணவிகள் தற்கொலை செய்து கொள்வது தமிழக மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் நடிகர் சூர்யா நீட் விவகாரம் தொடர்பாக வீடியோ பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.

மருத்துவராக வேண்டும் என்ற கனவுகளோடு நீட் தேர்வு எழுதும் மாணவர்கள், அதில் தோற்று விடுவோமோ என்ற பயத்தில் தற்கொலை செய்து கொள்வது அதிகரித்து வருகிறது. இதனையடுத்து 'மாணவர்கள் தற்கொலை செய்துகொள்ளக்கூடாது' என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார். அதைத் தொடர்ந்து தமிழக அரசின் சார்பில் நீட் தேர்வெழுதிய மாணவர்களின் மன உளைச்சலை போக்கும் வகையில் மனநல ஆலோசனை அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்த நிலையில் நீட் தேர்வுக்கு எதிராக ஆரம்பத்தில் இருந்தே தன்னுடைய கருத்தை பொதுவெளியில் நேரடியாக வெளிப்படுத்தி வரும் நடிகர் சூர்யா, நேற்று வெளியிட்ட வீடியோவில்,

''அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே. மாணவர்கள் அச்சமில்லாமல் நம்பிக்கையுடன் இருக்க வேண்டும் என வேண்டி கேட்டுக்கொள்கிறேன். உங்களுக்கு கடந்த மாதம் இருந்த வேதனை, கவலை இந்த மாதம் இருக்கிறதா? யோசித்து பாருங்கள். நிச்சயம் குறைந்திருக்கும் அல்லது தீர்ந்திருக்கும்.

பரீட்சை உங்கள் உயிரோட பெரிது இல்லை. உங்கள் மனதுக்கு கடினமாக இருந்தால், உங்களுக்குப் பிடித்தவர்கள், அப்பா, அம்மா, நண்பர்கள், பெரியவர்கள், ஆசிரியர்கள் என யாரிடமாவது மனது விட்டுப் பேசிவிடுங்கள்.

பயம், கவலை, வேதனை, விரக்தி எல்லாமே சிறிது நேரத்தில் மறைந்துவிடக் கூடியவை.

தற்கொலை, வாழ்க்கையை முடித்துக்கொள்வது என்பதெல்லாம் உங்களை விரும்புபவர்களுக்கு நீங்கள் கொடுக்கும் வாழ்நாள் தண்டனை. நான் எல்லா பரீட்சையிலும் தோல்வியடைந்து, குறைவான மதிப்பெண்களைப் பெற்றிருக்கிறேன். மதிப்பெண், தேர்வு மட்டும் வாழ்க்கையில்லை.

சாதிக்க அத்தனை விஷயங்கள் இருக்கின்றன. உங்களைப் புரிந்துகொள்ள நேசிக்க நிறைய பேர் இருக்கிறார்கள். நம்பிக்கை இருந்தால் வாழ்க்கையில் பெரிய அளவில் வெற்றி பெற முடியும்'' என மாணவர்களுக்கு ஊக்கம் அளிக்கும் விதத்தில் பேசியுள்ளார்.

-இராமானுஜம்

ரெட்டை ஜடையில் அமலா பால்: வைரலாகும் புகைப்படம்!

3 நிமிட வாசிப்பு

ரெட்டை ஜடையில் அமலா பால்: வைரலாகும் புகைப்படம்!

ஆஸ்கார் தகுதிப்பட்டியலில் ஜெய்பீம்!

3 நிமிட வாசிப்பு

ஆஸ்கார் தகுதிப்பட்டியலில் ஜெய்பீம்!

சுசிகணேசன் வழக்கு: சின்மயி - லீனா மணிமேகலைக்கு எதிராக தீர்ப்பு! ...

4 நிமிட வாசிப்பு

சுசிகணேசன் வழக்கு: சின்மயி - லீனா மணிமேகலைக்கு எதிராக தீர்ப்பு!

ஞாயிறு 19 செப் 2021