மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 19 செப் 2021

டாக்டருக்கு சாஸ்திரம் பார்த்த தயாரிப்பாளர்!

டாக்டருக்கு சாஸ்திரம் பார்த்த தயாரிப்பாளர்!

சிவகார்த்திகேயன் ரசிகர்களின் நீண்ட நாள் காத்திருப்பில் உள்ள படம் டாக்டர். நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தின் ரிலீஸ் குறித்து பல்வேறு செய்திகள் ஊடகங்களில் வெளியானது. 'கோலமாவு கோகிலா’ படத்துக்குப் பிறகு சிவகார்த்திகேயன் நடிப்பில், இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ள படம் ‘டாக்டர்’.

இந்தப் படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகிறார் பிரியங்கா மோகன். இவர்களுடன் யோகி பாபு, வினய் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்தப் படத்தை கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ் உடன் இணைந்து, சிவகார்த்திகேயனின் சொந்த நிறுவனமான எஸ்.கே.புரொடக்‌ஷன் தயாரித்துள்ளது.

'டாக்டர்' படம் முதலில் கடந்த மார்ச் 26ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. அப்போது தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் வேலைகள் நடைபெற்று வந்ததால் பட வெளியீட்டை ஒத்தி வைத்தனர் படக்குழுவினர். அதைத் தொடர்ந்து மே மாதம் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு படத்தை வெளியிட திட்டமிட்டனர் படக்குழுவினர்.

இந்த நிலையில் கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் அதிகரிக்க தொடங்கியதால் 'டாக்டர்' படத்தின் ரிலீஸ் மீண்டும் தள்ளிப்போனது. இதனிடையில் டாக்டர் படம் ஓடிடியில் வெளியாகும் என செய்திகள் பரவின. இதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. தயாரிப்பு தரப்பில் எதிர்பார்த்த விலை கிடைக்காததால் அந்த முயற்சி தோல்வியில் முடிந்தது. ஆனால், இதை மறுத்த படக்குழுவினர், படம் நிச்சயமாக திரையரங்கில்தான் வெளியாகும் என உறுதியளித்தனர்.

அதன்படி நேற்று மாலை டாக்டர் படத்தின் வெளியீட்டு தேதியை அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது தயாரிப்பு நிறுவனம். அந்த அறிவிப்பில் அக்டோபர் 9ஆம் தேதி படம் வெளியாகும் என்று கூறப்பட்டுள்ளது.

வழக்கமாக படங்கள் வெள்ளிக்கிழமையன்று வெளியாகும். பண்டிகை காலங்களிலும், வணிக மதிப்புள்ள நடிகர்களின் படங்களுக்கு இது பொருந்தாது. சில நேரங்களில் வியாழக்கிழமை கூட படம் வெளியிடப்படும். இந்த வழக்கங்களுக்கு மாறாக டாக்டர் சனிக்கிழமை வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருப்பதற்கு இரண்டு காரணங்கள் கூறப்படுகின்றன.

கொரோனாவுக்கு பிறகான இப்போதைய சூழலில் வியாழக்கிழமை படம் வெளியிட்டால் கூட்டம் வராது என்று விநியோகஸ்தர்கள் தரப்பில் கூறப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை 8ஆம் தேதி எட்டாம் எண் தயாரிப்பாளர் கே.ஜே.ஆருக்கு ராசி இல்லாத எண் என்பதாலும், விநியோகஸ்தர்கள் கூறிய ஆலோசனைக்கு மதிப்பளித்தது போன்று இருக்கும் என்கிற காரணத்தை முன்வைத்து அக்டோபர் 9ஆம் தேதி படத்தை வெளியிட முடிவு செய்து அறிவித்திருப்பதாகக் கூறப்படுகிறது.

-இராமானுஜம்

ரஜினி பாடல் காட்சிகள் அதிகம் விரும்பப்படவில்லையா?

4 நிமிட வாசிப்பு

ரஜினி பாடல் காட்சிகள் அதிகம் விரும்பப்படவில்லையா?

மானநஷ்ட வழக்கு தொடுத்த நடிகை சமந்தா

3 நிமிட வாசிப்பு

மானநஷ்ட வழக்கு தொடுத்த நடிகை சமந்தா

‘எனிமி’க்கு எனிமியான அண்ணாத்த

10 நிமிட வாசிப்பு

‘எனிமி’க்கு எனிமியான அண்ணாத்த

ஞாயிறு 19 செப் 2021