மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 19 செப் 2021

பாதியில் நிறுத்தப்பட்ட ஐபிஎல்: இன்று மீண்டும் தொடங்குகிறது!

பாதியில் நிறுத்தப்பட்ட ஐபிஎல்: இன்று மீண்டும் தொடங்குகிறது!

இந்தியாவில் நிலவிய கொரோனா அச்சத்தால் பாதியில் நிறுத்தப்பட்ட ஐபிஎல் தொடர் இன்று (செப்டம்பர் 19) ஐக்கிய அமீரகத்தில் மீண்டும் தொடங்குகிறது.

14ஆவது ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டி இந்தியாவில் சென்னை, மும்பை உள்ளிட்ட நகரங்களில் கடந்த ஏப்ரல் மாதம் 9ஆம் தேதி தொடங்கியது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு அப்போது உச்சத்தில் இருந்ததால் ரசிகர்கள் அனுமதிக்கப்படவில்லை. வீரர்கள், கொரோனா தடுப்பு மருத்துவப் பாதுகாப்பு வளையத்துக்குள் (பயோ பபுள்) தங்களை இணைத்து போட்டியில் பங்கேற்றனர். பாதுகாப்பு வளையத்தை மீறி யாரும் வெளியே சென்றாலோ, வெளியாட்களுடன் நேரடி தொடர்பு வைத்தாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

முதல் 29 ஆட்டங்கள் எந்தவித சலசலப்பும் இன்றி நடந்து முடிந்தது. அதன் பிறகு திடீரென நான்கு அணிக்குள் கொரோனா ஊடுருவியது. சில வீரர்கள் கொரோனா தொற்றுக்குள்ளானதால் வேறு வழியின்றி மே 3ஆம் தேதியுடன் ஐபிஎல் போட்டி நிறுத்தப்பட்டு காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது.

மீதமுள்ள ஆட்டங்களை நடத்த முடியாமல் போனால் ஏறக்குறைய ரூ.2,500 கோடி இழப்பு ஏற்படும் என்று கருதிய இந்திய கிரிக்கெட் வாரியம், அதை ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்றியது. அங்குள்ள துபாய், அபுதாபி, சார்ஜா ஆகிய நகரங்களில் இன்று (செப்டம்பர்) முதல் அக்டோபர் 15ஆம் தேதி வரை எஞ்சிய 31 ஆட்டங்கள் நடத்தப்படுகின்றன.

துபாயில் இன்று இரவு 7.30 மணிக்கு நடக்கும் தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணி - சென்னை சூப்பர் கிங்ஸுடன் மோதுகிறது. சென்னை அணி, மும்பையை வீழ்த்தி ஆறாவது வெற்றியைப் பெறும் ஆர்வத்தில் உள்ளது. அதே நேரத்தில் மும்பை அணி ஐந்தாவது வெற்றிக்காகக் காத்திருக்கிறது.

-ராஜ்

சித்தார்த் விவகாரத்தில் நடிகை கஸ்தூரி கருத்து!

3 நிமிட வாசிப்பு

சித்தார்த் விவகாரத்தில் நடிகை கஸ்தூரி கருத்து!

‘அழகி-2’: நடிகை நந்திதா தாஸின் ஆசை!

3 நிமிட வாசிப்பு

‘அழகி-2’: நடிகை நந்திதா தாஸின் ஆசை!

100 மில்லியன் பார்வைகளைக் கடந்த ‘டம் டம்’

2 நிமிட வாசிப்பு

100 மில்லியன் பார்வைகளைக் கடந்த ‘டம் டம்’

ஞாயிறு 19 செப் 2021