மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 19 செப் 2021

புரட்டாசியில தேர்தல் வையுங்க: அப்டேட் குமாரு

புரட்டாசியில தேர்தல் வையுங்க: அப்டேட் குமாரு

செய்திக்காக ஒரு கட்சியோட மாவட்ட செயலாளர் கிட்ட பேசிகிட்டு இருந்தேன். நல்லவேளையா உள்ளாட்சித் தேர்தலை புரட்டாசியில் வெச்சாங்க சார்னு ரொம்ப சந்தோஷப்பட்டார். என்னன்னு கேட்டேன்... புரட்டாசி மாசம்குறதால பலபேரு பிரியாணி எல்லாம் வேணாம் தயிர் சாதம் சாம்பார் சாதம் போதும்னு சொல்லிட்டாங்க. பேசாம இனிமேல் தேர்தலை எல்லாம் புரட்டாசி மாசம் வைச்சிடலாம்...

எங்கள போல கட்சி நிர்வாகிகளுக்கு பெரிய செலவு மிச்சமாகும் னு சொல்றாரு. தேர்தல் கமிஷன் இதை கவனத்தில் எடுத்துக்கணும்.

நீங்க அப்டேட் பாருங்க

தர்மஅடி தர்மலிங்கம்

நீட் தேர்விற்கு எதிரான சட்டமன்ற தீர்மானத்தால் எந்த பலனும் இருக்காது;பா.ஜ.க முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா!

பலன் இல்லாத தீர்மானத்துக்காகவா பாஜக உறுப்பினர்கள் சட்ட மன்றத்தை வெளிநடப்பு செஞ்சாங்க..??

amudu

அடுத்த 3 ஆண்டில் ரயில்வேயில் 50,000 பேருக்கு தொழில் திறன் பயிற்சி. -ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைணவ்.

அடுத்த 3 ஆண்டுகள் வரை ரயில்வே துறை இருக்குமான்னே தெரியல.

செங்காந்தள்

ஒரே இரவில்

ஜே.சி.பி இயந்திரம் கொண்டு தமிழ்நாட்டில் உள்ள

அனைத்து சுங்கசாவடிகளையும் அகற்றி விடுவேன் - சீமான்

இப்ப ஜேசிபி வேண்டுமா? முதலமைச்சர் பதவி வேண்டுமா?

கோழியின் கிறுக்கல்

புரட்டாசிக்கு தண்ணி அடிக்கலாமாம்,

ஆனா Side Dish சைவமா இருக்கணுமாம்!!

என்னங்கடா உங்க நியாயம்!?

amudu

பெரிய ரெய்டுகள் நடக்கின்றன, ஜாக்கிரதை என செல்லூர் ராஜூவை எச்சரித்த அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்.

பயமுறுத்துகிறாரா, இல்ல பார்த்து தப்பிச்சிக்கச் சொல்றாரான்னே புரியலையே.

நாகராஜசோழன்.MA.MLA.

பெட்ரோல், டீசல் விலையை ஜி.எஸ்.டி வரம்புக்குள் கொண்டு வருவதில் திமுகவின் நிலைப்பாடு என்ன?- அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் கேள்வி.

நீங்க ஆட்சில இருந்த போது என்ன நிலைபாடோ அதே நிலைப்பாடு தான்...

balebalu

பெற்றோரின் திருமண ஆல்பத்தை பார்க்கும் இந்த கால குழந்தை "நான் ஏன் அதில் இல்லை" என்ற கேள்விக்கு பதிலா

"ஏன் அதுல யாரும் மாஸ்க் போடவில்லை" என்று கேட்கிறது

சரவணன். ℳ

டாஸ்மாக்கில் எழுதி வைக்க வேண்டிய தத்துவம்..

"நான் வீழ்வேனென்று நினைத்தாயோ...!? "

தர்மஅடி தர்மலிங்கம்

மீண்டும் மோடி பிரதமராக வந்தால்தான் நாடு முன்னேறும்: குஷ்பு.

ஏன் இதுவரைக்கும் நாடு முன்னேறினது பத்தலைங்களா..??

மயக்குநன்

தமிழகத்தில் நேர்மையான, நியாயமான ஆட்சியை தருவோம்!- அண்ணாமலை.

நல்லவேளை... பாஜக ஆட்சியைத்தான் தருவீங்களோனு நெனச்சு டென்ஷன் ஆயிட்டோம்..!

amudu

புரட்டாசி மாதத்தில் மட்டும் காளானுக்கு சிக்கன் என்று பெயர்.

-லாக் ஆஃப்

சித்தார்த் விவகாரத்தில் நடிகை கஸ்தூரி கருத்து!

3 நிமிட வாசிப்பு

சித்தார்த் விவகாரத்தில் நடிகை கஸ்தூரி கருத்து!

‘அழகி-2’: நடிகை நந்திதா தாஸின் ஆசை!

3 நிமிட வாசிப்பு

‘அழகி-2’: நடிகை நந்திதா தாஸின் ஆசை!

100 மில்லியன் பார்வைகளைக் கடந்த ‘டம் டம்’

2 நிமிட வாசிப்பு

100 மில்லியன் பார்வைகளைக் கடந்த ‘டம் டம்’

ஞாயிறு 19 செப் 2021