மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 19 செப் 2021

துல்கர் சல்மான் வெளியிட்ட ஹனுமான் முதல் பார்வை!

துல்கர் சல்மான் வெளியிட்ட ஹனுமான் முதல் பார்வை!

இயக்குனர் பிரசாந்த் வர்மா இயக்கத்தில் வெளியான முதல் மூன்று படங்களான ஆவ், கல்கி மற்றும் ஸோம்பி ரெட்டி ஆகியவை வெவ்வேறு கதைக்களங்கள் கொண்ட திரைப்படங்கள்.

அவை விமர்சன ரீதியாகவும் வசூல் அடிப்படையிலும் வெற்றி பெற்ற படங்கள். தனித்துவமான உள்ளடக்கத்தைக் கொண்ட கமர்சியல் மசாலா பொழுதுபோக்கு திரைப்படங்களை உருவாக்குவது இயக்குனர் பிரசாந்த் வர்மாவின் தனிச்சிறப்பாகும்.

அதன் தொடர்ச்சியாக, அவரது அடுத்த திரைப்படமான ஹனு-மான் இந்தியத் திரையில் புதுமையான முயற்சியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

சூப்பர் ஹீரோ படமான ஹனுமானுக்காக சோம்பி ரெட்டி கூட்டணி மீண்டும் இணைகிறது. ரசிகர்களின் கண்களுக்கு விருந்தளிக்க போகும் ஹனுமானுக்காக நடிகர் தேஜா சஜ்ஜாவுடன் பிரசாந்த் வர்மா கைகோர்த்துள்ளார்.

ஏற்கனவே கூறியபடி, முதல் பார்வை போஸ்டரையும், அஞ்சனாத்ரி உலகத்திலிருந்து ஹனுமந்துவை அறிமுகப்படுத்தும் 65 வினாடிகள் காணொலியையும் படத்தின் குழு சார்பில் நடிகர் துல்கர் சல்மான் வெளியிட்டுள்ளார்.

தேஜா சஜ்ஜா அடர்ந்த காட்டில் உள்ள ஒரு மரத்தின் மேல் நின்று கொண்டு தனது இலக்கை ஒரு உண்டிகோல் மூலம் குறிப்பார்ப்பதை காணலாம். சூப்பர் ஹீரோவாக நடிப்பதற்காக கடும் பயிற்சிகளை அவர் மேற்கொண்டார். பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட உடைகளும், காலணியும் கவனத்தை ஈர்க்கின்றன.

ஒலி வடிவமைப்பும், பின்னணி இசையும் காட்சிகளுக்கு வலுவூட்டுகின்றன. அஞ்சனாத்ரிக்கு செல்லும் ஆர்வத்தை முதல் பார்வை போஸ்டர் மற்றும் காணொலி தூண்டுகின்றன.

பிரம்மாண்ட செலவில் தயாராகி வரும் இந்த திரைப்படத்தில் சாகசம் நிறைந்த சண்டை காட்சிகளும் இருக்கும். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் படம் வெளிவரவுள்ளது. பிரைம் ஷோ என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் உருவாகி வரும் இப்படத்தில், முன்னணி நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பணிபுரிகின்றனர். படப்பிடிப்பு தற்போது ஐதராபாத்தில் நடக்கிறது.

-இராமானுஜம்

ரெட்டை ஜடையில் அமலா பால்: வைரலாகும் புகைப்படம்!

3 நிமிட வாசிப்பு

ரெட்டை ஜடையில் அமலா பால்: வைரலாகும் புகைப்படம்!

ஆஸ்கார் தகுதிப்பட்டியலில் ஜெய்பீம்!

3 நிமிட வாசிப்பு

ஆஸ்கார் தகுதிப்பட்டியலில் ஜெய்பீம்!

சுசிகணேசன் வழக்கு: சின்மயி - லீனா மணிமேகலைக்கு எதிராக தீர்ப்பு! ...

4 நிமிட வாசிப்பு

சுசிகணேசன் வழக்கு: சின்மயி - லீனா மணிமேகலைக்கு எதிராக தீர்ப்பு!

ஞாயிறு 19 செப் 2021