மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 19 செப் 2021

மீரா மிதுன் வருகைக்காக காத்திருக்கும் ‘பேயை காணோம்’

மீரா மிதுன் வருகைக்காக காத்திருக்கும்  ‘பேயை காணோம்’

குளோபல் எண்டர்டெயின்மெண்ட் பட நிறுவனம் சார்பில் தேனி பாரத் ஆர். சுருளிவேல் தயாரிக்கும் படத்திற்கு " பேய காணோம் " என்று வித்தியாசமான தலைப்பை வைத்துள்ளனர்.

இந்த படத்தில் மீரா மிதுன் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். மற்றும் இயக்குனர் தருண் கோபி, கௌசிக், சந்தியா ராமச்சந்திரன், கோதண்டம், முல்லை, ஜெயா டிவி ஜேக்கப், செல்வகுமார் ஆகியோர் நடித்துள்ளனர்.கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் - செல்வ அன்பரசன்.

வாழ்க்கையில் பணத்தை காணோம், குழந்தையை காணோம், பொருளை காணோம், பொண்டாட்டியை காணோம், காதலியை காணோம், நண்பனை காணோம், இன்னும் எதை எதையோ காணோம் என்று தேடியிருப்போம்.

முதன் முதலாக ஒரு பேயை தேடுகிறார்கள். பேயை எதற்காக தேடுகிறார்கள் என்பது தான் படத்தின் திரைக்கதை. முழுக்க முழுக்க நகைச்சுவையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட பேய் படம் இது என்கிறார் இயக்குநர்

90 சதவீதம் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் சிறையில் இருக்கும் படத்தின் நாயகி மீரா மிதுன் ஜாமீன் பெற்று வெளியில் வந்தால் மட்டுமே படம் முழுமையாக முடிவடையும் அதற்காக படக்குழுவினர் காத்திருக்கிறார்கள்.

-இராமானுஜம்

சித்தார்த் விவகாரத்தில் நடிகை கஸ்தூரி கருத்து!

3 நிமிட வாசிப்பு

சித்தார்த் விவகாரத்தில் நடிகை கஸ்தூரி கருத்து!

‘அழகி-2’: நடிகை நந்திதா தாஸின் ஆசை!

3 நிமிட வாசிப்பு

‘அழகி-2’: நடிகை நந்திதா தாஸின் ஆசை!

100 மில்லியன் பார்வைகளைக் கடந்த ‘டம் டம்’

2 நிமிட வாசிப்பு

100 மில்லியன் பார்வைகளைக் கடந்த ‘டம் டம்’

ஞாயிறு 19 செப் 2021