மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 19 செப் 2021

வலைத்தொடருக்கு 10 கோடி ரசிகர்களா?

வலைத்தொடருக்கு 10 கோடி ரசிகர்களா?

தியேட்டர்களில் ஓடிடி தளத்தில் வெளியாகும் திரைப்படங்கள் அனைத்தையும் தாண்டி உலகையே ஒட்டுமொத்தமாகக் கட்டிப்போட்டிருக்கும் வலைத்தொடர் மணி ஹெய்ஸ்ட் (பணக் கொள்ளை).

ஸ்பெயின் நாட்டின் ஸ்பானிஷ் மொழியில் அலெக்ஸ் ரோட்ரிகோ இயக்கிய இந்தத் தொடர், 2017ஆம் ஆண்டு ஆண்டெனா 3 என்ற ஸ்பெயின் தொலைக்காட்சி சேனலில் லா காஸா டி பாபெல் என்ற பெயரில் ஒளிபரப்பானது.

இந்தத் தொடர் ஸ்பெயினில் பெரிய வரவேற்பைப் பெற்றதும், அதை கவனித்த நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் அதை அப்படியே கைப்பற்றி உலக மொழிகள் அனைத்திலும் வெளியிட்டது.

உலகத்தின் கவனத்தைப்பெற்ற நிலையில் அதன் அடுத்தடுத்த சீசன்களை நெட்ஃபிளிக்ஸே தயாரித்தது. ஹாலிவுட் திரைப்படங்களின் தரத்துக்கு கொஞ்சமும் குறைவில்லாமல் தயாரிக்கப்பட்ட இந்தத் தொடர் இன்றைக்கு உலகில் முதல் இடத்தைப் பிடித்துள்ளது.

ஒரு வங்கியைக் கொள்ளையடிக்கும் எட்டு கொள்ளையர்களையும், அவர்களை வெளியில் இருந்து வழிநடத்தும் பேராசிரியரும்தான் கதை. அரசையும் ராணுவத்தையும் திண்டாட வைக்கும் பேராசிரியரின் திட்டங்கள்தாம் தொடரின் மிக முக்கியமான பகுதி. டோக்கியோ என்கிற பெண்ணின் பார்வையில் இருந்து சொல்லப்படும் இந்தத் தொடரின் முக்கிய அம்சம் என்னவென்றால் இந்த கொள்ளையர்களை மக்களுக்குப் பிடித்திருக்கிறது. காரணம், கொள்ளைக்கு அவர்கள் சொல்லும் காரணம்.

வங்கியைக் கொள்ளை அடித்து பணத்தை அள்ளிச் செல்லாமல் அவர்களே பணத்தை அச்சடித்து செல்வார்கள். தங்க வங்கியில் கொள்ளை அடித்து தங்கத்தை உருக்கி எடுத்துச் செல்வார்கள். யாரையும் கொலை செய்ய மாட்டார்கள். பேராசிரியர் கேரக்டர் போலவே பயங்கரமான போலீஸ் அதிகாரி அலீசாவின் கேரக்டரும் மிகப்பிரசித்தம்.

ஏற்கனவே நான்கு சீசன் முடிவடைந்த நிலையில், ஐந்தாவது சீசனின் முதல் பகுதி கடந்த செப்டம்பர் 3ஆம் தேதி தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் வெளியானது. ஐந்தாவது சீசனின் இரண்டாவது பகுதி டிசம்பர் 3ஆம் தேதி வெளியாகிறது.

தமிழ் சீரியல்களில் கேரக்டர்கள் சாகும்போது பெண்கள் அழுதது மாதிரி இந்தத் தொடரின் முக்கிய கேரக்டர்கள் சாகும்போதெல்லாம் ஆண்கள் அழுவார்கள். முந்தைய பாகத்தில் நைரோபி செத்தபோது உலகம் அழுதது. கடைசியாக தொடரின் கதையைச் சொல்லி வரும் டோக்கியோ என்ற கேரக்டரின் மரணத்தோடு முடிந்திருக்கிறது.

தற்போது டோக்கியோவின் மரணத்துக்காக உலகம் அழுது கொண்டிருக்கிறது. இறுதிப் பகுதியில் பேராசிரியர் கதாபாத்திரம் கொல்லப்படுமா, தப்பிப்பரா என்று தெரியும்.

தொடருக்கு வரவேற்பு பெருகி வருவதால் பேராசிரியரைத் தப்பிக்க விட்டு இன்னொரு சீசன் கொண்டு வரலாமா அல்லது அவரை கொன்று சீசனை முடித்து விடலாமா என்று நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் யோசித்து வருவதாகக் கூறப்படுகிறது

இந்தத் தொடருக்கு உலகம் முழுக்க 100 கோடிக்கும் அதிகமான ரசிகர்கள் இருப்பதாகவும், இந்தியாவில் மட்டும் 10 கோடி ரசிகர்கள் இருப்பதாகவும் சமீபத்திய புள்ளி விவரம் ஒன்று தெரிவிக்கிறது.

இதன் ஐந்தாவது பகுதி சமீபத்தில் வெளியிடப்பட்டபோது ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் வெர்வ் லாஜிக் என்ற நிறுவனம் வெப் சீரிஸை தங்களது ஊழியர்கள் பார்ப்பதற்கு ஏதுவாக விடுமுறை அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

இப்போது இறுதிப் பகுதிக்கு உலகமே காத்துக் கிடக்கிறது.

-இராமானுஜம்

ரஜினி பாடல் காட்சிகள் அதிகம் விரும்பப்படவில்லையா?

4 நிமிட வாசிப்பு

ரஜினி பாடல் காட்சிகள் அதிகம் விரும்பப்படவில்லையா?

மானநஷ்ட வழக்கு தொடுத்த நடிகை சமந்தா

3 நிமிட வாசிப்பு

மானநஷ்ட வழக்கு தொடுத்த நடிகை சமந்தா

‘எனிமி’க்கு எனிமியான அண்ணாத்த

10 நிமிட வாசிப்பு

‘எனிமி’க்கு எனிமியான அண்ணாத்த

ஞாயிறு 19 செப் 2021