மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 18 செப் 2021

வெங்கட்பிரபுவுடன் ஜோடி சேர்ந்த சினேகா

வெங்கட்பிரபுவுடன் ஜோடி சேர்ந்த சினேகா

அச்சமுண்டு அச்சமுண்டு, பெருச்சாளி (மலையாளம்) நிபுணன் படங்களை இயக்கியவர் அருண் வைத்தியநாதன். இப்போது தன் பெயரை அருணாச்சலம் வைத்தியநாதன் என்று மாற்றிக் கொண்டு புதிய படம் ஒன்றை இயக்குகிறார். இது கணவன் மனைவிக்கு இடையிலான உளவியல் ரீதியான பிரச்சினையை பேசுகிற படம்.

இதில் கணவராக வெங்கட்பிரபுவும். மனைவியாக சினேகாவும் நடிக்கிறார்கள். தனுஷின் பட்டாஸ் படத்திற்கு பிறகு சினேகா நடிக்கும் படம். வெங்கட் பிரபு கடைசியாக வலைதளத்தில் வெளியான கசடதபற படத்தில் நடித்திருந்தார்.

சினேகா நடிப்பது பற்றி அருணாச்சலம் வைத்தியநாதன் கூறியதாவது:

"ஆரம்பத்தில், நான் சினேகாவிடம் பேசியபோது, அவர் தயங்கினார், அவர் இதற்கு முன்பு அத்தகைய கேரக்டரை செய்யவில்லை என்று சொன்னார். ஆனால் நான் அவரிடம் கதையை விவரித்தவுடன், அவர் சிரித்துக் கொண்டே, நான் இதைச் செய்கிறேன் என்று ஒப்புக் கொண்டார்.

அச்சமுண்டு அச்சமுண்டு படத்திற்கு பிறகு பிரசன்னா மற்றும் சினேகாவிடம் நல்ல நட்பில் இருக்கிறேன். அதனால் தான், நான் சினேகாவுடன் மீண்டும் பணியாற்ற முடிந்தது. இந்த படத்தில் சினேகா ஒரு வித்தியாசமான அம்மாவாக நடிக்கிறார்" என்றார்.

-இராமானுஜம்

சிவகார்த்திகேயன் எதிர்பார்க்காத டாக்டர் வசூல்!

5 நிமிட வாசிப்பு

சிவகார்த்திகேயன் எதிர்பார்க்காத டாக்டர் வசூல்!

ஜெய் பீம் கதைக்களம்!

2 நிமிட வாசிப்பு

ஜெய் பீம்  கதைக்களம்!

10 ஆண்டுகளுக்குப் பின் நடிக்கும் வாணி விஸ்வநாத்

2 நிமிட வாசிப்பு

10 ஆண்டுகளுக்குப் பின் நடிக்கும் வாணி விஸ்வநாத்

சனி 18 செப் 2021