மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 18 செப் 2021

சீனுராமசாமி வழங்கிய வெற்றித் தமிழன் பட்டம் யாருக்கு?

சீனுராமசாமி வழங்கிய வெற்றித் தமிழன் பட்டம் யாருக்கு?

தமிழ் சினிமாவில் குறைந்த செலவில் மண்ணின் மணம் மாறாமல் யதார்த்தமாக படம் இயக்கி வருபவர் சீனுராமசாமி. விஜய்சேதுபதி என்கிற நடிகரை தென்மேற்கு பருவக்காற்று படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகப்படுத்தியவர்.

நடிகர்கள் பெரும்பாலும் தங்களுக்கான அடைமொழி அல்லது பட்டத்தை தாங்களே உருவாக்கி கொள்வது தமிழ் சினிமாவில் வாடிக்கையான ஒன்று. அதனால்தான் தமிழை தாய் மொழியாக கொள்ளாத நடிகர் ஸ்ரீகாந்த்க்கு இளைய தமிழன் என்கிறஅடைமொழியை படத்தின் டைட்டிலில் போட்டுக்கொள்ள முடிந்தது.

தமிழ் நடிகர்களில் அதிகப்படங்களை கைவசம் வைத்திருக்க கூடிய நடிகர்களில் ஜி.வி.பிரகாசும் ஒருவர் இவருக்கு இயக்குநர் சீனுராமசாமி தனது டிவிட்டர் பதிவு மூலம் பட்டம் ஒன்றை வழங்கியுள்ளார்.

இவரின் இயக்கத்தில் அண்மையில் இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் நடிப்பில் 'இடிமுழக்கம்' படத்திற்கு தேனி, புதுச்சேரி ஆகிய இடங்களில் படப்பிடிப்பை நடத்தினர் படக்குழுவினர்.

சீனு ராமசாமியின் முந்தைய படங்களை போல் அல்லாமல் ஆக்ஷன் த்ரில்லர் களமாக இந்தப்படம் உருவாகியுள்ளது. இந்தப்படத்தில் ஜி.வி பிரகாஷ் ஜோடியாக காயத்ரி நடிக்கிறார்.

இவர் ஏற்கனவே சீனுராமசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள மாமனிதன் படத்தில் விஜய் சேதுபதி ஜோடியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் 'இடிமுழக்கம்' படப்பிடிப்பை நிறைவு செய்த ஜி.வி.பிரகாஷ் தனது ட்விட்டர் பக்கத்தில், 'இடிமுழக்கம்' படப்பிடிப்பு இனிதே நிறைவு பெற்றது. திருவிழா முடிந்து பள்ளிக்குச் செல்லப்போகும் மாணவனைப் போல சென்னை வருகிறேன். இந்த அழகான நாட்களை நினைவுகளாக எனக்குத் தந்த சீனு ராமசாமி சாருக்கு நன்றி. 'இடிமுழக்கம்' குழுவினருக்கு நன்றி என்று பதிவிட்டுள்ளார்.

அவரின் இந்த ட்வீட்டை குறிப்பிட்டு இயக்குநர் சீனு ராமசாமி, "ஆணவம் இல்லாத அறிவு, தாய்மொழிப் பற்று, தன்னை ஒப்புவித்து ஒத்துழைத்த கலை எளிமை, இசையோடு கூடிய தமிழறிவு, என் கலை மீதான அன்பு, இவையெல்லாம் உங்கள் பக்கம் என்னை ஈர்த்தது. "வெற்றித் தமிழன்" என்றே உங்களை அழைக்க விழைகிறேன். துணை வரட்டும் என் தாய் மீனாட்சி. வாழ்த்துகள் தம்பி ஜி.வி.பிரகாஷ்" என்று பதிவிட்டுள்ளார்.

-இராமானுஜம்

சித்தார்த் விவகாரத்தில் நடிகை கஸ்தூரி கருத்து!

3 நிமிட வாசிப்பு

சித்தார்த் விவகாரத்தில் நடிகை கஸ்தூரி கருத்து!

‘அழகி-2’: நடிகை நந்திதா தாஸின் ஆசை!

3 நிமிட வாசிப்பு

‘அழகி-2’: நடிகை நந்திதா தாஸின் ஆசை!

100 மில்லியன் பார்வைகளைக் கடந்த ‘டம் டம்’

2 நிமிட வாசிப்பு

100 மில்லியன் பார்வைகளைக் கடந்த ‘டம் டம்’

சனி 18 செப் 2021