மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 16 செப் 2021

கரீனா கபூருக்கு பதில் கங்கனா

கரீனா கபூருக்கு பதில் கங்கனா

அலௌகிக் தேசாய் இயக்கும் படம் சீதா - தி இன்கார்னேஷன். இந்தப் படத்தில் சீதாவாக நடிப்பதற்கு இந்தி நடிகை கரீனா கபூரிடம் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. சீதாவாக நடிக்க ரூ.12 கோடி சம்பளமாக கரீனா கபூர் கேட்டிருக்கிறார்.

இந்த நிலையில் கரீனாவுக்கு பதிலாக கங்கனா ரணாவத்தை சீதாவாக நடிக்க வைக்க தற்போது ஒப்பந்தம் செய்திருக்கிறது தயாரிப்பு நிறுவனம். படத்தின் போஸ்டரை இன்ஸ்டா ஸ்டோரீஸில் ஷேர் செய்து சீதாவாக நடிக்கும் வாய்ப்பு கொடுத்ததற்காக இயக்குநருக்கு நன்றி தெரிவித்துள்ளார் கங்கனா ரணாவத்.

சீதா படம் குறித்து இயக்குநர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது,

“கானல் நீராக இருந்தது தற்போது தெளிவாகிவிட்டது. சீதாவாக கங்கனா ரணாவத்தை நடிக்க வைப்பதில் மகிழ்ச்சி. நம்பிக்கைக்கும், ஆதரவுக்கும் நன்றி எஸ்.எஸ்.ஸ்டூடியோ” என்று தெரிவித்துள்ளார்.

ரூ.12 கோடி சம்பளமாகக் கேட்டது தொடர்பாக கரீனா கபூர் கூறியிருப்பதாவது, “எனக்கு என்ன வேண்டும் என்று தெளிவாகக் கூறிவிட்டேன். என் கருத்துக்கு மரியாதை அளிக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.

இது அதிகாரம் செய்வது இல்லை, பெண்களுக்கு மரியாதை அளிப்பது ஆகும். காலம் மாறி வருகிறது. ஒரு படத்தில் ஆணுக்கும், பெண்ணுக்கும் சரிசமமான சம்பளம் கொடுப்பது பற்றி சில ஆண்டுகளுக்கு முன்பு வரை யாரும் பேசவில்லை. தற்போது நாம் வெளிப்படையாகப் பேசுகிறோம்” என்கிறார்.

-இராமானுஜம்

ரெட்டை ஜடையில் அமலா பால்: வைரலாகும் புகைப்படம்!

3 நிமிட வாசிப்பு

ரெட்டை ஜடையில் அமலா பால்: வைரலாகும் புகைப்படம்!

ஆஸ்கார் தகுதிப்பட்டியலில் ஜெய்பீம்!

3 நிமிட வாசிப்பு

ஆஸ்கார் தகுதிப்பட்டியலில் ஜெய்பீம்!

சுசிகணேசன் வழக்கு: சின்மயி - லீனா மணிமேகலைக்கு எதிராக தீர்ப்பு! ...

4 நிமிட வாசிப்பு

சுசிகணேசன் வழக்கு: சின்மயி - லீனா மணிமேகலைக்கு எதிராக தீர்ப்பு!

வியாழன் 16 செப் 2021