மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 16 செப் 2021

ஆட்டிசம் பாதித்த பெண்ணாக ஐஸ்வர்யா ராஜேஷ்

ஆட்டிசம் பாதித்த பெண்ணாக ஐஸ்வர்யா ராஜேஷ்

ஆட்டிசம் என்பது பிறப்பிலிருந்தே வரும் ஒரு குறைபாடு. இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதை பற்றி தெரியாமல் தனக்கு என்ன தோன்றுகிறதோ அதைச் செய்வார்கள்.

அபூர்வமாக சிலருக்கு இந்த நோய் திடீர் அதிர்ச்சியாலும் ஏற்படலாம். குறிப்பாக விபத்து, மிகவும் நெருக்கமானவர்களின் மரணம் போன்றவற்றால் ஏற்படலாம்.

இப்படியான ஆட்டிசம் பாதித்த பெண்ணின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு தமிழில் ஒரு படம் தயாராகிறது. ஐஸ்வர்யா ராஜேஷ் ஆட்டிசம் பாதித்த பெண்ணாக நடிக்கிறார். அவரது பின்னணி பற்றி அறிய நியமிக்கப்படும் விசாரணை அதிகாரியாக அர்ஜுன் நடிக்கிறார்.

தினேஷ் லக்ஷ்மணன் எழுதி இயக்கும் இந்தப் படத்தை, ஜி.அருள்குமார் தயாரிக்கிறார். சரவணன் அபிமன்யு ஒளிப்பதிவு செய்கிறார். பரத் ஆசீவகன் இசை அமைக்கிறார், பிரவீன் ராஜா, பிராங்க்ஸ்டர் ராகுல், அபிராமி வெங்கடாசலம் மற்றும் பலர் நடிக்கின்றனர்.

படம் பற்றி தயாரிப்பாளர் ஜி.அருள்குமார் கூறியதாவது, “இது ஒரு க்ரைம் - த்ரில்லர் இன்வெஸ்டிகேஷன் கதை, அர்ஜுன் இந்தப் படத்தில் விசாரணை அதிகாரியாக நடிக்கிறார். இது மன இறுக்கம் கொண்ட ஆட்டிசம் பாதித்த குழந்தைகளின் பின்னணியில் ஒரு பெண் கதாபாத்திரத்தை மையமாக கொண்ட திரைப்படம். இந்தப் படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை பெண் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவரது கதாபாத்திரத்திம் படத்தில் முக்கியத்துவம் மிகுந்த கதாபாத்திரமாகும்.

இயக்குநர் தினேஷ் லக்ஷ்மணன் திரைக்கதையை முதன்முதலில் விவரித்தபோது, நான் பார்வையாளராக மிகவும் ரசித்தேன். திரையரங்குகளில் இந்தப் படத்தை பார்க்கும் பார்வையாளர்களுக்கு, நீண்ட காலத்துக்குப் பிறகு க்ரைம் - த்ரில்லர் இன்வெஸ்டிகேஷன் வகைகளில் ஒரு புதிய அனுபவத்தைத் தரும்.

நடிகர் அர்ஜுன் இந்த வகையைச் சேர்ந்த திரைப்படங்களில் அதிகம் நடித்திருந்தாலும், இந்தப் படம் அதிலிருந்து மாறுபட்டு, தனித்துவமாகவும் வித்தியாசமாகவும் இருக்கும்" என்றார்.

-இராமானுஜம்

சிவகார்த்திகேயன் எதிர்பார்க்காத டாக்டர் வசூல்!

5 நிமிட வாசிப்பு

சிவகார்த்திகேயன் எதிர்பார்க்காத டாக்டர் வசூல்!

ரஜினி பாடல் காட்சிகள் அதிகம் விரும்பப்படவில்லையா?

4 நிமிட வாசிப்பு

ரஜினி பாடல் காட்சிகள் அதிகம் விரும்பப்படவில்லையா?

சிறந்த பிளாக் காமெடி திரைக்கதை ‘மண்டேலா’

2 நிமிட வாசிப்பு

சிறந்த பிளாக் காமெடி திரைக்கதை  ‘மண்டேலா’

வியாழன் 16 செப் 2021