மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 16 செப் 2021

சல்யூட்டை எதிர்பார்த்து சர்ச்சைக்குள்ளான நடிகர்!

சல்யூட்டை எதிர்பார்த்து சர்ச்சைக்குள்ளான நடிகர்!

மலையாள நடிகரும் எம்.பியுமான, சுரேஷ் கோபி கேரள மாநிலத்தில் புயலால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குவதற்காக திருச்சூர் மாவட்டம் புதூருக்கு சென்றார்.

அங்கு போக்குவரத்துக்கு இடையூறாக விழுந்து கிடக்கும் மரங்களை வனத்துறையினர் அகற்றவில்லை என அப்பகுதி மக்கள் சுரேஷ் கோபியிடம் புகார் தெரிவித்தனர்.

அதனையடுத்து ஒல்லூர் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் சி.ஜே ஆண்டனியை அழைத்து இந்த புகாரை சம்பந்தப்பட்டவர்களுக்கு அனுப்பி கவனிக்கும்படி கூறினார் சுரேஷ் கோபி.

அப்போது அந்த சார்பு ஆய்வாளர் சுரேஷ் கோபிக்கு சல்யூட் அடிக்கவில்லை. இதை கவனித்த சுரேஷ் கோபி நான் ஒன்றும் மேயர் அல்ல பாராளுமன்ற உறுப்பினர் எனக்கு சல்யூட் அடிக்க மாட்டீர்களா? என்று கேட்டார். அதன்பின் அந்த போலீஸ் அதிகாரி அவருக்கு சல்யூட் அடித்தார்.

இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதால் இதுகுறித்து விளக்கம் அளித்த சுரேஷ் கோபி சல்யூட் அடிக்க அந்த அதிகாரியை கட்டாயப்படுத்தவில்லை. அவரை சார் என்று மரியாதையுடன் தான் அழைத்தேன்.

நான் ஒரு எம்.பி, எனக்கு போலீசார் மரியாதை தர வேண்டும் என்பது ராஜ்யசபை செயலகம் கூறுகிறது. போலீசின் மரியாதை என்பது சல்யூட்தானே என்று கூறினார்.

இந்த சம்பவம் குறித்து கேரள போலீஸ் அதிகாரிகள் சங்கம் கூறியிருப்பதாவது, எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ.க்கள் போன்ற தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கு காவல்துறை வணக்கம் செலுத்த வேண்டும் என்று கேரள காவல்துறையின் நிலைப்பாட்டு உத்தரவில் கூறப்படவில்லை. குடியரசுத் தலைவர், பிரதமர், கவர்னர், முதல்வர் மற்றும் அமைச்சர்களுக்கு மட்டுமே வணக்கம் செலுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

-இராமானுஜம்

ரஜினி பாடல் காட்சிகள் அதிகம் விரும்பப்படவில்லையா?

4 நிமிட வாசிப்பு

ரஜினி பாடல் காட்சிகள் அதிகம் விரும்பப்படவில்லையா?

மானநஷ்ட வழக்கு தொடுத்த நடிகை சமந்தா

3 நிமிட வாசிப்பு

மானநஷ்ட வழக்கு தொடுத்த நடிகை சமந்தா

‘எனிமி’க்கு எனிமியான அண்ணாத்த

10 நிமிட வாசிப்பு

‘எனிமி’க்கு எனிமியான அண்ணாத்த

வியாழன் 16 செப் 2021