மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 16 செப் 2021

இந்தியன் பஞ்சாயத்து: சங்கடத்தில் ஷங்கர்

இந்தியன் பஞ்சாயத்து: சங்கடத்தில் ஷங்கர்

கமல்ஹாசன் நடிப்பில் தயாராகிக் கொண்டிருக்கும் இந்தியன் 2 படம், ஜனவரி 18, 2019 அன்று படப்பிடிப்புடன் சென்னை மெமோரியல் ஹாலில் தொடங்கியது.

பல்வேறு சிக்கல்கள் காரணமாக அப்படத்தின் படப்பிடிப்பு தடைபட்டிருக்கிறது.இதனால், கமல்ஹாசன் ஒரு புதியபடத்தில் (விக்ரம்) நடிக்கப் போய்விட்டார். இயக்குநர் ஷங்கரும் தெலுங்குப்படம் இயக்க தயாராகிவிட்டார்.

இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் சென்னை வந்த லைகா நிறுவனர் சுபாஷ்கரனுடன் நடந்த சந்திப்பின்போது, இந்தியன் 2 படத்தை முடித்துக் கொடுத்து விடுவதாக இயக்குநர் ஷங்கர் உறுதி அளித்தார்.

அதன்படி, கமல்ஹாசன் பங்கு பெறாத காட்சிகளின் படப்பிடிப்பை உடனடியாகத் தொடங்கத் திட்டமிட்டு வேலைகளை ஆரம்பித்தனர். அந்த வேலைகள் நடந்துகொண்டிருக்கும் போதே ராம்சரண் படம் தொடங்கப்பட்டது.

தன்னிடம் கொடுக்கப்பட்ட உறுதிமொழிக்கு மாறாக இந்தப்படம் தொடங்கப்பட்டதால் சுபாஷ்கரன் கோபமாகிவிட்டாராம். லைகா நிறுவனத்தினர் ஷங்கரிடம் இதுபற்றிக் கேட்டபோது, இது ஏற்கெனவே திட்டமிடப்பட்ட நிகழ்ச்சி, பூஜை மட்டும்தான் போடுகிறோம் படப்பிடிப்பு தாமதமாகும் என்று சமாதானம் சொல்லியிருக்கிறார்

அதோடு, சித்தார்த், பிரியா பவானிசங்கர் ஆகியோர் நடிக்க வேண்டிய காட்சிகள் உட்பட பல காட்சிகளைப் படமாக்குவதற்கேற்ப ஷங்கர் குழு தயாராகி வந்த சூழ்நிலையில், ஷங்கர் சொன்னபடி நடந்துகொள்ளவில்லை என்கிற கோபத்தில், லைகா நிறுவனம் படப்பிடிப்பை நடத்தத் தேவையானவற்றைச் செய்துகொடுக்கவில்லை என்று சொல்லப்படுகிறது. இதனால் இயக்குநர் ஷங்கர் சங்கடத்தில் இருக்கிறாராம்.

-இராமானுஜம்

ரெட்டை ஜடையில் அமலா பால்: வைரலாகும் புகைப்படம்!

3 நிமிட வாசிப்பு

ரெட்டை ஜடையில் அமலா பால்: வைரலாகும் புகைப்படம்!

ஆஸ்கார் தகுதிப்பட்டியலில் ஜெய்பீம்!

3 நிமிட வாசிப்பு

ஆஸ்கார் தகுதிப்பட்டியலில் ஜெய்பீம்!

சுசிகணேசன் வழக்கு: சின்மயி - லீனா மணிமேகலைக்கு எதிராக தீர்ப்பு! ...

4 நிமிட வாசிப்பு

சுசிகணேசன் வழக்கு: சின்மயி - லீனா மணிமேகலைக்கு எதிராக தீர்ப்பு!

வியாழன் 16 செப் 2021